கூட்டேரிப்பட்டில் மறியலில் ஈடுபட வந்த 92 பேர் கைது

கூட்டேரிப்பட்டில் மறியலில் ஈடுபட வந்த 92 பேர் கைது
X
மயிலம் போலீசார் கைது செய்தனர்
விழுப்புரம் மாவட்டம்,மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் புயல் வெள்ள நிவாரண தொகை 2 ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த 100க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலைக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த டி.எஸ்.பி., பிரகாஷ் தலைமையிலான மயிலம் போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக 92 பேரை கைது செய்தனர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Next Story