தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முரசொலி மாறன் 92வது பிறந்தநாள்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முரசொலி மாறன் 92வது பிறந்தநாள்
X
திமுக சார்பில் முரசொலி மாறன் 92வது பிறந்தநாள்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 92 வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடை பெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமை வகித்து அலங்கரிக்கப்பட்ட அன்னாரது திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் கலை கதிரவன், மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி, செங்கோட்டை நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன், திமுக அலுவலக மேலாளர் ராமராஜ், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story