கரூர் மாவட்டத்தில் 92.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 92.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 92.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு செய்தது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை பல்வேறு பகுதியில் மழை பெய்துள்ளது. பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கரூரில் 19.20 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 21 மில்லி மீட்டர், மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைப்பாளயத்தில் 22 மில்லி மீட்டர், க. பரமத்தியில் 5.00 மில்லி மீட்டர்,தோகை மலையில் 14.00மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 1.00 மில்லி மீட்டர், மாயனூரில் 4.00 மில்லி மீட்டர், பஞ்ச பட்டியில் 3.60 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 3.00 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் 92.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 7.73 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story