கரூர் பாண்டிச்சேரி மதுபானங்களை பதுக்கி வைத்தவர் கைது.ரூ.9300 மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்.

கரூர் பாண்டிச்சேரி மதுபானங்களை பதுக்கி வைத்தவர் கைது.ரூ.9300 மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்.
கரூர் பாண்டிச்சேரி மதுபானங்களை பதுக்கி வைத்தவர் கைது.ரூ.9300 மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல். கரூரில் பாண்டிச்சேரி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாலகிருத்திகாவுக்கு கிடைத்த தகவலின் பேரில் செவ்வாய்க்கிழமை அன்று கரூர்- மதுரை சர்வீஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் டயர் கடை அருகே மதுபானங்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பதுக்கி வைத்த மேன்சன் ஹவுஸ் லெமன் ஒயிட் பிராந்தி 10 புல் பாட்டில்களும்,500 எம்எல் கொண்ட பட்வைஸர்பீர் 15 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த மதுபானங்களின் மதிப்பு ரூபாய் 9,325 என மதிப்பீடு செய்த காவல்துறையினர் இந்த தகாத செயலில் ஈடுபட்ட கரூர் வெண்ணமலை சேரன் நகரை சேர்ந்த அங்கப்பன் என்கிற சதீஷை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.பின்னர் அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் காவல்துறையினர்,
Next Story