பகத்சிங் 94 ஆவது நினைவுத் தினம் அனுசரிப்பு.

பகத்சிங் 94 ஆவது நினைவுத் தினம் அனுசரிப்பு.
X
பகத்சிங் 94 ஆவது நினைவுத் தினம் அனுசரிப்பு நடைபெற்றது.
பகத்சிங் 94 ஆவது நினைவுத் தினம் அனுசரிப்பு அரியலூர், மார்ச் 23: அரியலூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், பகத்சிங் 94 ஆவது நினைவுத் தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் முன்னாள் மாவட்ட துணைச் செயலர் டி.தண்டபாணி, பகத்சிங் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, விடுதலைச் போராட்ட வீரர்கள் பகத்சிங் , ராஜகுரு ,சுகதேவ் ஆகிய இளம் போராளிகள் குறித்தும், அவர்கள் செய்த தியாகங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். ஒன்றியச் செயலர் து.பாண்டியன் நகரச் செயலர் கோவிந்தசாமி, இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் பெரியசாமி, மாவீரன், விக்னேஷ், ஏஐடியுசி நிர்வாகி பெருமாள், நாகமங்கலம் கிளை நிர்வாகிகள் பிச்சைப்பிள்ளை, தையல்நாயகி, அஞ்சலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பகத்சிங் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story