உணவுப் பொருள்களின் தரம் குறித்த புகாருக்கு  94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் 

உணவுப் பொருள்களின் தரம் குறித்த புகாருக்கு  94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் 
X
உணவுப் பாதுகாப்பு
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், உணவக உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரிமம் பெற்ற உணவங்களின் எண்ணிக்கை குறித்தும், பதிவு பெற்ற உணவகங்களின் எண்ணிக்கை குறித்தும், உணவகங்களில் எடுக்கப்பட்ட உணவு மாதிரிகளின் எண்ணிக்கை குறித்தும், பாதுகாப்பற்ற உணவு மாதிரிகளின் எண்ணிக்கை குறித்தும், உணவகங்களுக்கு வழங்கப்பட்ட ஹெச்.ஆர் (Hygiene Rating) சான்றிதழின் எண்ணிக்கை குறித்தும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், உணவக உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து கேட்டறியப்பட்டது.  பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டத்தில் பேசியதாவது,  அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல், அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் விற்பனை செய்ய வேண்டும். கடந்த மாதம் பெறப்பட்ட RUCO OIL 6,700 லிட்டர் எனவும், மேலும் இதனை அதிகப்படுத்திட உணவகங்கள் முன்வர வேண்டும். RUCO OIL எனப்படும்   மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், பயோ-டீசல் தயாரிப்புக்காக அதற்கான நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 40 வீதம் பெற்றுக் கொள்கின்றன.  நெகிழி பைகளில் டீ, காபி, சாம்பார், குருமா போன்றவை பார்சல் செய்யப்பட்டு விற்பனை செய்வது பொதுமக்கள் நலனில் கேடு விளைவிப்பதாகும். எனவே அவற்றை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.  உணவு வணிகர்கள் அனைவரும் பதிவுச் சான்று / உரிமம் கட்டாயம் பெற வேண்டும். உதிரிகளாக விற்பனை செய்யப்படும் இனிப்பகங்கள், கார வகைகள் மற்றும் இதர உணவு வகைகளுக்கு தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இட்டு விற்பனை செய்ய வேண்டும்.  உணவு வணிகர்கள் அனைவரும் FOSTAC பயிற்சி முடித்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது பயிற்சி முடித்தவர்களை வேலைக்கு வைத்திருக்க வேண்டும். அனைத்து உணவகங்களுக்கும் Hygiene Rating எனப்படும் சான்றிதழ் பெற்றிட வேண்டும்.  உணவக, பேக்கரி உரிமையாளர்கள் அந்தந்த பகுதி பொதுமக்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கிட முன்வர வேண்டும்.  உணவகங்களில் சுகாதாரமான குடிநீர் வழங்கிடுமாறும், பொதுமக்களுக்கு தரமான, ஆரோக்கியமான உணவுப்பொருள் வழங்கிட உணவு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறும்" கேட்டுக் கொண்டார்  மேலும், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் புகார் எண். 94440 42322 மற்றும் TNFSD என்ற செயலி மூலம் உணவு பாதுகாப்பு குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
Next Story