ஸ்டாலின் ஆட்சியில் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சியில் தரம் மற்ற முறையில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலை.,அரசு பணம் 95 லட்சம் வீணானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு..*

X
ஸ்டாலின் ஆட்சியில் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சியில் தரம் மற்ற முறையில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலை.,அரசு பணம் 95 லட்சம் வீணானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இந்நிலையில் மூன்றாவது வார்டு மற்றும் நான்காவது வார்டில் கம்யூனிஸ்ட் கட்சி,திமுக கட்சி கவுன்சிலர்கள் உள்ளனர்.இந்த வார்டுகளுக்கு உட்பட்ட வேல்முருகன் தெரு, கருப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 1500 க்கும் மேற்பட்ட வாக்காளர்களும் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 95 லட்சம் மதிப்பில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலை தரமற்றதாக இருப்பதாகவும் மேடு பள்ளங்கள் விழுந்து விரிசல் விட்டு காணப்படுவதாகவும் முறையான திட்டமிடல் இல்லாமல் சாலை அமைத்ததால் வாறுகால்கள் அடைத்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு சில பகுதிகளில் வேலை முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் முறைகேடு செய்து பணம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. தரமற்ற முறையில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலையினால் அரசு பணம் வீணடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் மம்சாபுரம் பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேவர் பிளாக் சாலையை மறுசீரமைப்பு செய்து தரமான சாலைகளை அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

