கரூரில், "மயக்கம் என்ன" பாடலைப் பாடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 96 வது பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்.
Karur King 24x7 |1 Oct 2024 10:55 AM GMT
கரூரில், "மயக்கம் என்ன" பாடலைப் பாடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 96 வது பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்.
கரூரில், "மயக்கம் என்ன" பாடலைப் பாடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 96 வது பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள். தமிழ் திரை உலகின் பிதாமகன். நடிப்பின் சிகரமாகவும், நடிகர் திலகம் என்றும், மக்கள் மனதில் வாழ்ந்து வரும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இன்று 96-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் கரூர் மாவட்ட சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் சிவாஜி குமரேசன் தலைமையில் கேக் வெட்டி 96 வது பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது, சிவாஜி குமரேசன் சிவாஜி கணேசன் நடித்த தமிழ் படத்தில் வரும் "மயக்கம் என்ன? உந்தன் மவுனம் என்ன" பாடலைப் பாடி நடிகர் திலகம் சிவாஜியின் மீதான மயக்கத்தின் தாக்கத்தினை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ்மார்க் சண்முகம், சோழிய வேளாளர் மாவட்ட செயலாளர் பெரியசாமி பிள்ளை, காங்கிரஸ் நகர துணை தலைவர் கண்ணப்பன், புகலூர் நகர காங்கிரஸ் தலைவர் கமல்ராஜ் உள்ளிட்ட சிவாஜி ரசிகர் மன்ற ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை கொண்டாடினர். .
Next Story