கரூர் மாவட்டத்தில் 96.10 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 96.10 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 96.10 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு. வங்கக் கடலில் உருவாகி, வடமேற்கு திசையில் நகர்ந்து வந்த பெஞ்சல் புயல், நேற்று மேற்கு திசையில் நகர துவங்கியதால், எதிர்பார்த்தபடி கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டது. பிறகு மாலை 5 மணிக்கு புதுச்சேரி அருகே புயல் கரையை கடக்க துவங்கியது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிகனமழையும், பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் லேசானது முதல் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் கனமழை பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து விடிய விடிய மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் அறிவிப்பு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கரூரில் 7.40 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 9.00 மில்லி மீட்டர், அணைப்பாளையத்தில் 6.20 மில்லி மீட்டர்,க. பரமத்தியில் 7.00 மில்லி மீட்டர், குளித்தலையில் 14.20 மில்லி மீட்டர், தோகை மலையில் 9.20 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 13.50 மில்லி மீட்டர், மாவட்டத்தில் அதிகபட்சமாக மாயனூரில் 15.00 மில்லி மீட்டர், பஞ்சபட்டியில் 10.60 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 4.00 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 96.10 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 8.01 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Next Story