கோவை மாவட்டத்தில் 9,635 டன் உரங்கள் இருப்பு !

கோவை மாவட்டத்தில் 9,635 டன் உரங்கள் இருப்பு !
X
கோவை மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவ பயிர்சாகுபடிக்கான தேவையான 9,635 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவ பயிர்சாகுபடிக்கான தேவையான 9,635 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.மாவட்டத்தில் இதுவரை உணவுத்தானியங்கள் 4,133 ஹெக்டேர், பருப்பு வகைகள் 762 ஹெக்டேர், பருத்தி 73 ஹெக்டேர், கரும்பு 176 ஹெக்டேர், எண்ணெய்விதைகள் 1,362 ஹெக்டேர் என மொத்தம் 6,506 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும், தோட்டக்கலை பயிர்களில் காய்கறிகள் 11,379 ஹெக்டேர் மற்றும் தென்னை, வாழை, கொய்யா, மஞ்சள் உள்ளிட்ட மலைப்பயிர்கள் 26,379 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது மாவட்டத்தில் யூரியா 1,121 டன், டி.ஏ.பி 1,813 டன், பொட்டாஷ் 1,851 டன், சூப்பர்பாஸ்பேட் 1,495 டன் மற்றும் காம்ப்ளெக்ஸ் 3,355 டன் என மொத்தம் 9,635 டன் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு செயல்படுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து யூரியா உரங்கள் இறக்குமதி செய்து ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story