பத்தாம் வகுப்பு தேர்வில் 96.46 சதவீதம் பெரம்பலூர் ஏழாவது இடம்

X
பெரம்பலூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.46 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் - பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் ஏழாவது இடம் பிடித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (16.05.2025) வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 96.46 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 4,180 மாணவர்களும், 3,728 மாணவிகளும் என மொத்தம் 7,908 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 3,966 மாணவர்களும், 3,662 மாணவிகளும் என மொத்தம் 7,628 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார், சுயநிதிப்பள்ளிகள், சமூக நலப்பள்ளி என மொத்தம் 141 மேல்நிலைப்பள்ளிகள் உள்ள நிலையில் மொத்தம் 70 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அம்மாபாளையம், கைகளத்தூர், வெங்கலம், சத்திரமனை. கூத்தூர், லப்பைக்குடிகாடு (ஆ), மருவத்தூர், ஒகளூர், கிழுமத்தூர் மாதிரி, தொண்டமாந்துறை, காரியானூர், செங்குணம், வேலூர், தம்பிரான்பட்டி, பெரியம்மாபாளையம், அசூர், ஒதியம், முருக்கன்குடி, ஜமின்பேரையூர், கிழுமத்தூர், காருகுடி, ஆதனூர், எழுமூர், வடக்கலூர், சில்லக்குடி, ஜமின் ஆத்துர், நன்னை, புது வேட்டக்குடி, கொட்டரை, மலையாளப்பட்டி ஆகிய 30 அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுனர். இதேபோன்று 04 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 06 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளும், 30 சுயநிதி, மெட்ரிக் பள்ளிகளும், என மொத்தம் 60 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுளனர்.
Next Story

