கோவையில் இருந்து கேரளாவிற்கு உயர் ரக போதை பொருள் கடத்தல் : 98 கிராம் மெத்தாம்பெட்டமின் பறிமுதல் !

கோவையில் இருந்து கேரளாவிற்கு உயர் ரக போதை பொருள் கடத்தல் :  98 கிராம் மெத்தாம்பெட்டமின் பறிமுதல் !
X
கோவையிலிருந்து எர்ணாகுளம் நோக்கி போதைப் பொருள் கடத்தல் – வாளையார் சோதனையில் முறியடிப்பு
தமிழக - கேரளா எல்லையான கோவை அருகே உள்ள வாளையார் எக்சைஸ் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கை நடைபெற்றது. அங்கு எக்சஸ் சர்கிள் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவையில் இருந்து ஆலப்புலா நோக்கி சென்ற KSRTC சூப்பர் ஃபாஸ்ட் பேருந்தில் பயணித்த ஒரு பயணியிடம் உயர் ரக போதைப் பொருளான மெத்தாம்பெட்டமின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பாலக்காடு காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த ரிச்சார்ட் சிறியான் என்பதும் கோவையில் இருந்து பேருந்து மூலம் 98 கிராம் மெத்தாம்பெட்டமின் எர்ணாகுளம் கடத்திச் சென்று விற்பனை செய்ய இருந்ததும் தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த கேரள மாநிலம், பாலக்காடு காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story