கரூர் மாவட்டத்தில் 99 மில்லி மீட்டர் மழை அளவுபதிவு.மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 99 மில்லி மீட்டர் மழை அளவுபதிவு.மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 99 மில்லி மீட்டர் மழை அளவுபதிவு.மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் அறிவிப்பு. தமிழகம்,கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மீது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது வடக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கும் சூழலில், தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு செய்தது. இதன் அடிப்படையில் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. அதில் கரூரில் 1.60 மில்லி மீட்டரும், அனை பாளையத்தில் 2- மில்லி மீட்டர், குளித்தலையில் 18.40 மில்லி மீட்டர், தோகை மலையில் 20 மில்லி மீட்டர், மாயனூரில் ஒரு மில்லி மீட்டர், மாவட்ட த்தில் அதிகபட்சமாக பஞ்சபட்டியில் 30 மில்லி மீட்டரும், கடவூரில் 21 மில்லி மீட்டர், பாலபடுதியில் ஐந்து மில்லி மீட்டர் என மொத்தம் 99 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 8.25 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் சற்று முன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story