சமத்துவ விழாவில் 998 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

X

திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ விழாவில் 998 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மற்றும் வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் கலந்துகொண்டு, 998 பயனாளிகளுக்கு ரூ.3.51 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர். விழாவில், அண்ணல் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். இவ்விழாவில், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, துணை மேயர் ராஜப்பா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் காயத்திரி, முக்கிய பிரமுகர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story