கோவை: AIயால் வேலை இழப்பில்லை – மனித ஆற்றலே முக்கியம் !

X
கோவையில் நடைபெற்ற கல்லூரி வரவேற்பு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட ஜோகோ நிறுவன தலைமை மனிதவள மேம்பாட்டு மேலாளர் சார்லஸ் காட்வின், AI தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை குறைக்காது, மாறாக தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்தும் ஒரு சாதனமாகவே இருக்கும் என்றார். மனித ஆற்றலே தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படை என்றும், 12 மணி நேர வேலை எந்தத் துறையிலும் தேவையற்றது என்றும் அவர் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவர் கதிர், செயலாளர் லாவண்யா கதிர், முதல்வர் கற்பகம் ஆகியோரும் கலந்து கொண்டு, சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
Next Story

