மதுரையில் Anti-Ragging வாரம் தொடக்க விழா
மதுரையில் Anti-Ragging வாரம் 2025 தொடக்க நிகழ்ச்சி நேற்று (ஆக.12) தியாகராஜர் கலைக் கல்லூரி நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள், ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் உடன் கலந்து கொண்டனர். நிகழ்வில், Anti-Ragging சட்டம் குறித்த விதிகள், அதன் முக்கியத்துவம் மற்றும் ரேகிங் செய்தால் ஏற்படும் சட்ட நடவடிக்கைகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, ஆன்லைன் பாதுகாப்பு, பொறுப்பான டிஜிட்டல் பயன்பாடு, மற்றும் இணையத் தாக்குதல்களைத் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story





