சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சேலம் அம்ருதம் டிரஸ்ட், A.S. கன்சல்டிங் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி...

X
Rasipuram King 24x7 |8 Dec 2025 9:34 PM ISTசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சேலம் அம்ருதம் டிரஸ்ட், A.S. கன்சல்டிங் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி...
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சேலம் அம்ருதம் டிரஸ்ட், A.S. கன்சல்டிங் இணைந்து நடத்திய, 7ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக ராசிபுரம் VT & Sons ஸ்ரீ விக்னேஷ்வரா கன்பெக்ஷனரி தொழிலதிபர் V.T. தமிழ்ச்செல்வன், ராசிபுரம் நாவலடியான் & கோ தொழிலதிபர் நாவலர் மணி, ராசிபுரம் ஸ்ரீ நாராயணா ஸ்கேல் கம்பெனி N.பிரகாஷ், ராசிபுரம் ஜூவா பிராய்லர்ஸ் R.ரவி, ராசிபுரம் R.சுமதி மதிவதனி சேகுவேரா மதிவதனி, ராசியாம் அணைக்கும் கரங்கள் கி.ஜாய் ரோசலின், ராசிபுரம் கடவுளின் ட்ரஸ்ட் K.ரமேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டு சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சுமார் 130 மேற்பட்ட மாற்றத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருத்துரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை சேலம் அம்ருதம் டிரஸ்ட் நிறுவனர் R.செந்தில்ரத்தினம், ராசிபுரம் நகராட்சி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் V. சுந்தரம் செய்திருந்தனர்.
Next Story
