ராசிபுரத்தில், தேசிய அளவிலான வெற்று வில் (Bare Bow) சாம்பியன்ஷிப் - 2025 போட்டிகள் தொடங்கின. வில்வித்தை வீரர்கள் 100 பேர் பங்கேற்றனர்..

ராசிபுரத்தில், தேசிய அளவிலான வெற்று வில் (Bare Bow) சாம்பியன்ஷிப் - 2025 போட்டிகள் தொடங்கின. வில்வித்தை வீரர்கள் 100 பேர் பங்கேற்றனர்..
X
ராசிபுரத்தில், தேசிய அளவிலான வெற்று வில் (Bare Bow) சாம்பியன்ஷிப் - 2025 போட்டிகள் தொடங்கின. வில்வித்தை வீரர்கள் 100 பேர் பங்கேற்றனர்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், தேசிய அளவிலான வெற்று வில் (Bare Bow) சாம்பியன்ஷிப் - 2025 போட்டிகள் தொடங்கின. வில்வித்தை வீரர்கள் 100 பேர் பங்கேற்றனர்.. சாதாரண வில்லைக் கொண்டு விளையாடப்படும் பாரம்பரிய வில்வித்தை போட்டியை வெற்று வில் (Bare Bow)போட்டி என அழைக்கின்றனர். இந்தியா, சீனா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிரபலமாக விளையாடப்பட்டு வரும் இந்த
வெற்று வில்
விளையாட்டுப் போட்டிகள், உலகளவில் கவனத்தை பெற்று வருகின்றன. இதனிடையே, இந்திய Bare Bow சங்கத்தின் அனுமதியுடன், தமிழ்நாடு Bare Bow சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் உள்ள (ஸ்ரீ வித்யா மந்திர்) பள்ளி வளாகத்தில், 26-04-2025 & 27-04-2025 (சனி, ஞாயிறு) ஆகிய 2 நாள்களில், தேசிய அளவிலான வெற்று வில் சாம்பியன்ஷிப் 2025 போட்டிகள் தொடங்கின. இதில், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களில் இருந்து 100 வில்வித்தை வீரர்கள்- வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். 12, 17 வயது மற்றும் திறந்த நிலை (Open) ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தேசிய அளவிலான வெற்று வில் சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளை, இராசிபுரம் (ஸ்ரீ வித்யா மந்திர்) பள்ளி வளாகத்தில் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் Dr. C. நடராஜு, V. சுந்தர்ராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டிகளில், 25 போர்டுகள் வைக்கப்பட்டு, 100 வீரர்-வீராங்கனைகள் இலக்குகளை நோக்கி வெற்று வில்லில் அம்புகளை வைத்து எய்தனர். 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 10 மீட்டர், 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 20 மீட்டர், திறந்த நிலை பிரிவில் பங்கேற்பவர்களுக்கு 30 மீட்டர் ஆகிய தொலைவுக்கு அம்புகள் எய்தும் வகையில் போட்டிகள் நடைபெற்றன. 27.04.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. திறந்த நிலை பிரிவில் பங்கேற்று வெற்றி பெறும் வில்வித்தை வீரர்- வீராங்கனைகள், தாய்லாந்து தலைநகரம் பாங்காக்கில், 2025 ஜூலை 3,4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஆசிய வெற்று வில் சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளில் பங்கேற்பார்கள். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை, இந்திய வெற்று வில் / தமிழ்நாடு வெற்று வில் சங்கப் பொதுச் செயலாளர் R. கேசவன் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.
Next Story