நகர திமுக BLA2 ஆலோசனை கூட்டம்

X
Komarapalayam King 24x7 |24 Aug 2025 7:08 PM ISTகுமாரபாளையம் வடக்கு, தெற்கு நகர திமுக BLA2 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
குமாரபாளையம் வடக்கு, தெற்கு நகர திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நகர திமுக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி அவர்கள் தலைமையில் BLA2 ஆலோசனைக் கூட்டம் வடக்கு நகர திமுக பொறுப்பாளர் நகர மன்ற தலைவர் த.விஜய் கண்ணன் அவர்கள் தெற்கு நகர பொறுப்பாளர் ஜி.எஸ்.ஞானசேகரன்அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் கே.கே. செல்வன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தலைமை சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஜே.கே.எஸ்.மாணிக்கம், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெப்படை செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஓ.ஆர்.செல்வராஜ், மாவட்ட பொருளாளர் ராஜாராம், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், ஜேம்ஸ், அண்ணமார்கந்தசாமி, சத்தியசீலன், செந்தில்குமார், ரவி,குட் லக்செல்வம், தர்மராஜன், தேவி மணி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், வாக்குச்சாவடி முகவர்கள் BLA2, மாவட்ட, நகர கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி ,மகளிர் அணி உள்ளிட்ட மாவட்ட, நகர சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் கழக நிர்வாகிகள்கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story
