குளித்தலையில் அதிமுக சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், BLA2 ஆலோசனைக் கூட்டம்
கரூர் மாவட்டம், குளித்தலை பேரறிஞர் அறிஞர் அண்ணா சமுதாய மன்றத்தில் அதிமுக சார்பில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள்,மண்டல பொறுப்பாளர்கள், பூத் ஏஜெண்டுகள் (BLA 2) நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் கரூர் மாவட்ட செயலாளர்,முன்னாள் அமைச்சர்ருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் ம.சின்னச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் :- தற்போது தமிழ்நாட்டினுடைய தேர்தல் சிறப்பு திட்டம் அறிவித்த உடனே நம்முடைய பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் இந்த சிறப்பு திட்டத்திற்கு வரவேற்றுகிறார் ஆனால் இன்று ஆளுகின்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஒன்று திரட்டி சிறப்பு திட்டத்தை எதிர்ப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாக மக்களை ஏமாற்றி இதுபோல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்கள் தற்போது கரூர் சட்டமன்றத் தொகுதியில் போலியான 11,000 வாக்குகள் சேர்ந்திருக்கிறது அந்த பத்தாயிரம் வாக்குகளை நீக்கியிருக்கிறோம் அதே போல் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் அரவக்குறிச்சி,தொகுதியில் சுமார் 3000 வாக்குகளை நீக்கி உள்ளோம் இதுபோன்று சரியான வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் நோக்கம் அதை நாம் வரவேற்று இருக்கிறோம் எனவும் அண்ணா திமுக என்பது மாபெரும் இயக்கம் 33 ஆண்டுகள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்த இயக்கம் என்றும் யாருடனும் கூட்டணியில் இருந்த வெற்றி பெற்ற அதிகாரம் கிடையாது.கூட்டணி குறித்து நமது பொதுச் செயலாளர் எடப்பாடியார் பார்த்துக்கொள்வார் நாம் வெற்றியுடன் உழைத்தால் கண்டிப்பாக நம் புரட்சித்தலைவி அம்மாவினுடைய ஆட்சி அமையும் என்பது மாற்றுக்கருத்தே கிடையாது எனவும் எல்லாரும் யூடியூப்ல பேசுகிறார்கள் பணம் தான் எல்லாம் பணத்தை கொடுத்தால் எது வேண்டுமானுலும் பேசுவார்கள் அதைப்பற்றி கவலை கொண்ட வேண்டாம் எனவும் ஒரே ஒரு டிவி மட்டுமே கரூரில் நடைபெற்ற 41 பேர் அப்பாவி மக்கள் இறந்த துக்க சம்பவம் பற்றி ஒரு நாள் முழுவதும் ஒளிபரப்பாகியது ஆனால் திமுகவினர் அந்த சேனலை பிடுங்கி வெளிய தூக்கிப் போட்டு விட்டது ஏன் பயம்? எதுக்கு பயப்படுறீங்க? எல்லாத்துக்கும் தெரியும் நாப்பது ஒரு உயிரும் வழியாக காரணம் யார் என்று கடவுளுக்குத் தெரியும் அந்த ஆண்டவன் சும்மா விட மாட்டான் அது நிறைவேறியே தீரும் என்றும் நம்முடைய பொதுச் செயலாளர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகள் வாரியாக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற கொள்கை பரப்போடு எழுச்சி பயணம் மேற்கொண்டர் அதேபோல கரூர் மாவட்டத்தில் எத்தனை இடையுறுகள் எத்தனை இடமாற்றம் ஏற்பட்டது தெரியுமா? அதே செயல்கள் வேறொருவருக்கு நடைபெற்று இருக்கிறது அதனால் சிபி விசாரணை நடக்கிறது கண்டிப்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அதில் எந்தவித மாற்றம் கருத்தும் கிடையாது என்றும் விடியா திமுக ஆட்சி எல்லாமே பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது தான் ஆட்சிக்கு வந்தவுடன் கரூர் கோயம்புத்தூர் கீழ 1750 கோடி ரூபாய் பாலம் மற்றும் குளித்தலை முசிறி இடையே கதவனை கட்டப்படும் என்று கூறினார்கள் ஆனால் நான்கரை வருடம் ஆகிவிட்டன இன்று வரை செய்யவில்லை ஏதாவது ஒன்று நடந்திருக்கிறதா கொள்ளை அடிப்பது மட்டும் தான் அவர்களது வேலை பணம் நிறைய வருகிறது பத்து ரூபாய் தான் வருகிறது என்று மக்களுக்கு தெரியுது பத்து ரூபாய் மட்டும் தான் வருகிறதா என்று எங்களை போன்ற ஆட்களுக்கு மட்டும் தான் தெரியும் எப்படி வருகிறது என்று அதனால்தான் கருணாநிதி குடும்பம் சேர்த்து வைத்திருக்கின்றது இதே குளித்தலை தொகுதியில் இப்பொழுது இருக்க கூடிய முதலமைச்சர் என்ன பேசினார் என்று உங்களுக்கு தெரியும் அதே முதலமைச்சர் இப்ப என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும் அதற்கும் பணம் தான் காரணம் என்றும் இன்னும் நான்கு அம்மாவாசை மட்டும் தான் உள்ளது இந்த திருட்டு கூட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் சிறப்பாக தேர்தல் பணியாற்றி வெற்றிவாகை சூடி நமது பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்களை முதலமைச்சர் பதவியில் அமர வைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கூறி கொள்கிறேன் என்று உரையை முடித்தார் அதன் பின்பு கழக அமைப்புச் செயலாளரும்,முன்னாள் அமைச்சர் ம. சின்னச்சாமி உரையாற்றினார் தாங்கள் கழகத்தின் உண்மையாக உழைத்து திறம்பட செயல்பட்டு நமது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சியில் அமர வைக்க அயராது பாடுபட வேண்டும் என கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சரவணன், குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், மேற்கு ஒன்றிய செயலாளர் விநாயகம், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர். தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன், நகர செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story



