கோவை: BSF முகாமில் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்கம்
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கிட்டாம்பாளையம் எல்லை பாதுகாப்பு படை (BSF) முகாம் வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்டு நிர்வாக காரணங்களால் தாமதமாகியிருந்த பள்ளி, தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்பட துவங்கியுள்ளது. பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து பாஜக வேட்பாளர் அண்ணாமலை மத்திய அமைச்சர்களை சந்தித்து நடவடிக்கை எடுத்ததையடுத்து, அனைத்து பணிகளும் நிறைவு பெற்றன. இன்று நடைபெற்ற துவக்க விழாவில் BSF துணை கமாண்டர் கிருஷ்ண காந்தகுமார், முன்னாள் துணை கமாண்டர் ராஜேஷ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி துவங்கப்பட்டதால் சுற்றுவட்டார ஏழை மக்களுக்கு கல்வி வசதி கிடைப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Next Story




