அமேசான், பிளிப்கார்ட்டில் BSI தர நிர்ணய அதிகாரிகள் குழு சோதனை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காக்கலூர், புதுவாயலில் அமேசான், பிளிப்கார்ட்டில் BSI தர நிர்ணய அதிகாரிகள் குழு சோதனை
ஆன்லைனில் தரமற்ற பொருட்கள் விற்பனை. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காக்கலூர், புதுவாயலில் அமேசான், பிளிப்கார்ட்டில் BSI தர நிர்ணய அதிகாரிகள் குழு சோதனை பிரபல இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் கிடங்குகளில் நடத்திய சோதனையில் ஏராளமான சான்று பெறாத பொருட்கள் பிடிபட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள காக்களூர் தொழில்பேட்டையில் இ-காமர்ஸ் குடோன்களில் பி ஐ எஸ் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது அதேபோன்று புதுவாயல் பகுதியில் உள்ள இ-காமர்ஸ் குடோன்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர் இந்தியா முழுவதும் மக்கள் பலர் அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து பெருகின்றனர். சின்ன ஊசி தொடங்கி பெரிய பெரிய கட்டில், பீரோ முதற்கொண்டு அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன இவற்றில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், மின்சாதன பொருட்கள், சமையல் பொருட்கள் என பலவற்றிற்கு உரிய சான்றிதழ் வாங்க வேண்டிய விதிகள் உள்ள நிலையில், அவ்வாறு சான்று பெறாத பொருட்கள் இ-காமர்ஸ் தளங்களில் விற்கப்படுவதாக புகார் எழுந்தது அதை தொடர்ந்து BIS (Bureau of Indian Standarts) அதிகாரிகள் வட மாநிலங்களில் சில தினங்களுக்கு முன்பு லக்னோ, குருகிராம், டெல்லியில் உள்ள இ-காமர்ஸ் கிடங்குகளில் நடத்திய சோதனையில் ஏராளமான சான்றிதழ் பெறாத மின்சாதன பொருட்கள், மெட்டல் வாட்டர் பாட்டில்கள், உணவு மசாலாக்கள் என கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பொருட்களை இ-காமர்ஸ் நிறுவனம் மூலம் விற்றுவந்த நிறுவனங்கள் மீதும் விசாரணை நடத்தினர். BIS சட்டத்தின்படி, தவறு செய்தவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படும். மேலும், விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பை விட பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு இரண்டு வருடம் வரை சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்பும் உள்ளது. சந்தையில் கிடைக்கும் பொருட்கள் தரமானதாக இருக்கிறதா என்பதை பி.ஐ.எஸ்.தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சந்தையில் கிடைக்கும் பல்வேறு நுகர்வோர் பொருட்களை பி.ஐ.எஸ்.வாங்கி, அவற்றை தரமானதா என பரிசோதனை செய்கிறது. பொதுவாக பயன்படுத்தப்படும் பிரஷர் குக்கர்கள், ஹேண்ட்-ஹெல்ட் பிளெண்டர்கள், உணவு கலவை இயந்திரங்கள், எலக்ட்ரிக் அயன் பாக்ஸ்கள், ரூம் ஹீட்டர்கள், பிவிசி கேபிள்கள், கேஸ் ஸ்டவ்கள், பொம்மைகள், இரு சக்கர வாகன ஹெல்மெட்கள், ஸ்விட்சுகள், சாக்கெட்டுகள் மற்றும் அலுமினியம் ஃபாயில்கள் போன்ற பொருட்கள் பி.ஐ.எஸ். மூலம் கண்காணிக்கப்படுகின்றன. தரமற்ற பொருட்களால் ஏற்படும் ஆபத்துகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு BIS சான்றிதழை கட்டாயமாக்கியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, மிந்த்ரா, பிக் பாஸ்கெட் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களில் பி.ஐ.எஸ். சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்ட பிறகும், சான்றிதழ் இல்லாத பொருட்கள் விற்பனை செய்யப்படுவது பி.ஐ.எஸ். சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் வாங்கும் போது சான்றிதழ் முத்திரை இருக்கிறதா என்று பார்க்குமாறு பி.ஐ.எஸ். மக்களிடம் கேட்டுக்கொள்கிறது. BIS Care மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி ISI முத்திரை மற்றும் உற்பத்தியாளரின் உரிம எண்ணை சரிபார்க்கலாம். BIS சான்றிதழ் பெற்ற பொருள்தானா என்பதை உறுதிப்படுத்தலாம். மேலும், ISI முத்திரை இல்லாத பொருட்கள் அல்லது BIS சான்றிதழ் பெறாத பொருட்களின் தரம் குறித்தும் புகாரளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Next Story