நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் CBS மற்றும் CTS ஆகிய பிரிவுகளுக்கான கட்டடங்களை கூட்டுறவு துறை செயலர் சத்யபிரதா சாகு திறந்து வைத்தார்!

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, அரசு முதன்மைச் செயலர் சத்ய பிரதா சாகு நேரில் சென்று, சங்கத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசு முதன்மை செயலாளர், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சத்யபிரதா சாகு, புதிய கட்டடங்களை திறந்து வைத்து, 66 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில், கடன் உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில், Core Banking Solutions (CBS) மற்றும் Cheque Truncation system (CTS) ஆகிய கட்டடங்களுக்கான திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, அவ்வங்கித் தலைவரும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, அரசு முதன்மை செயலாளர் சத்ய பிரதா சாகு நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், CBS மற்றும் CTS ஆகிய பிரிவுகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்தார். அப்போது, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலக செயல்பாடுகள், வாடிக்கையாளர்கள் வழங்கப்படும் சேவைகள் குறித்து அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராஜேஸ்குமார் எம்பியிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து வங்கி வளாகத்தில், அரசு முதன்மை செயலாளர் சத்ய பிரதா சாகு, தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான மகளிர்க்கான மின் - ஆட்டோ வாகனம் தலா ரூபாய் 3 லட்சம் வீதம் ரூ. 6 இலட்சம் மதிப்பில், 2 பெண்களுக்கு மின்-ஆட்டோ வாகனங்கள், மற்றும் 4 பேருக்கு வீட்டு அடமான கடன் உதவிகள் உட்பட ரூ. 66 லட்சம் மதிப்பீட்டில் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் க.பா. அருளரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் மா. சந்தானம், பொது மேலாளர் தீனதயாளன், முதன்மை வருவாய் அலுவலர் சே.பால் ஜோசப், தலைமை அலுவலக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.முன்னதாக,
நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, அரசு முதன்மைச் செயலர் சத்ய பிரதா சாகு நேரில் சென்று, சங்கத்தின் செயல்பாடுகள், முதல்வர் மருந்தக சேமிப்புக் கிடங்கு, கூட்டுறவு பல்பொருள் அங்காடி, கூட்டுறவு மருந்தகம், நகைக் கடன் சேவை மையம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உடன் இருந்தார். அப்போது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் க. பா. அருளரசு, சரக துணைப் பதிவாளர் சே. ஜேசுதாஸ், சங்கப் பொது மேலாளர் மோகனவேல், துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story