ஆட்டோ மீது ஆம்புலன்ஸ் மோதிய CCTV வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ மீது ஆம்புலன்ஸ் மோதிய CCTV வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூரில் ஆட்டோ மீது ஆம்புலன்ஸ் மோதிய CCTV வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . குன்னூரில் பிரதான சாலையில் இன்று ஆட்டோ ஒன்று சாலையில் திரும்பும்போது நோயாளியை ஏற்றுக் கொண்டு அரசு மருத்துவமனையை நோக்கி வந்த ஆம்புலன்ஸ் ஆட்டோ மீது மோதியது இதில் ஆட்டோ ஓட்டுநர் சாலையில் விழுந்தார் உடனே அருகில் இருந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மக்கள் அதிகமாக நடமாடும் சாலையில் ஆட்டோ மீது ஆம்புலன்ஸ் மோதிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story