மாவட்ட அளவிலான குழு கூட்டம் (DBLC) முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர் கா. கார்த்திகா தலைமையில் சரவண முருகன் முன்னிலையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னிலையில் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர்கள்( IE)சிறப்பு பயிற்றுநர்கள், இயன் முறை மருத்துவர்கள் ஆகியோருக்கான மாவட்ட அளவிலான குழு கூட்டம் (DBLC) முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா கூறுகையில் மாற்றுத் திறனாளி மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அடுத்த வகுப்பிற்கு சென்றிருப்பதை உறுதி செய்தல், Emis இணையதளத்தில் common pool ல் உள்ள மாணவர்களை சார்ந்த பள்ளியில் சேர்த்தல், அறிவு சார் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு முதல் பருவத்திற்குரிய எண்ணும் எழுத்தும் புத்தகங்கள் வழங்கப் பட்ட Emis இணையதளத்தில் பதிவு செய்தல், விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத் திறன் மாணவர்களைக் கண்டறிந்து போட்டிகளில் பங்கு பெறச் செய்தல், 216 மாற்றுத் திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெறப்பட வேண்டும் என்றும் கூறினார்.270 மாணவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை பெறப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் 227 மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.கலைத் திருவிழா மற்றும் மன்ற செயல்பாடுகளில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில் அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல் வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் 140 பேர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.சூரியகலா ஒருங்கிணைத்தார்.
Next Story




