கோவை மாவட்டத்தி DFO - வை இடமாற்றம் செய்ய வேண்டும் - எஸ்.பி. வேலுமணி !

X
கோவை மாவட்டத்தில் யானை தாக்குதல்கள் அதிகரித்து, மனித உயிரிழப்பு, காயங்கள், பயிர்ச் சேதம் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். முன்னாள் அதிமுக ஆட்சியில் அகழிகள் தோண்டி யானை நுழைவு தடுக்கப்பட்டதையும், தனது சட்டமன்ற நிதியில் ஒதுக்கிய தொகையும், எட்டு கோடி ரூபாய் நிதி திட்டமும் தற்போதைய ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டதாக அவர் தெரிவித்தார். வேட்டை தடுப்பு காவலர்கள், வாகனங்கள், தடுப்பு வேலி உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், கோவை DFO மக்கள், அதிகாரிகளிடம் மரியாதையற்ற முறையில் நடந்துகொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். வெள்ளலூர் குப்பை கிடங்கில் துர்நாற்றம், குளங்களில் ஆகாயத்தாமரை, தொற்றுநோய் அபாயம், மாநகராட்சி செயல்பாடுகள் இல்லாமை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டிய அவர், அவற்றை அரசு ஆறு மாதத்தில் சரி செய்ய வேண்டும், இல்லையெனில் ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாது என எச்சரித்தார். வருகிற 9ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி கோவை வருவார் என்றும் வேலுமணி தெரிவித்தார்.
Next Story

