பட்டணம் Dr.கலாம் பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பசுமைத் திருவிழா.

X
Rasipuram King 24x7 |12 Oct 2025 8:22 PM ISTபட்டணம் Dr.கலாம் பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பசுமைத் திருவிழா.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர். பட்டணம் டாக்டர் கலாம் பசுமை இயக்கம் மற்றும் கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா முன்னாள் மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகள் நடும் பசுமைத் திருவிழா இரா. பட்டணம் பொன்மலை திருத்தலத்தில் டாக்டர் கலாம் பசுமை இயக்கத் தலைவர் இன்ஜினியர் என். மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. டாக்டர் கலாம் பசுமை இயக்கம் பொருளாளர் என். சக்திவேல் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் -சேலம் மாவட்ட கல்வி அலுவலர் பணி நிறைவு, அண்ணாமலை பல்கலைகழகம் முன்னாள் செனட் உறுப்பினர் முனைவர் மு.ஆ.உதயக்குமார், இயக்குனர் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்கள், ஆன்மிக பைங்கொழந்து டாக்டர் எஸ். குருவாயூரப்பன், அனைத்து வித்யாலய முன்னாள் மாணவர் சங்க இணைச் செயலாளர் கே. அருணாச்சலம், இராசிபுரம் லயன்ஸ் கிளப் தலைவர் ஆர். பெரியசாமி, நாமக்கல் மாவட்ட ஈஷா ஒருங்கிணைப்பாளர் கே. ராஜா, ஆர்.பட்டணம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். ராஜ்குமார், நமது தேடல் நாளிதழ் தொலைக்காட்சி முதன்மை செய்தியாளர் ஜி. வெங்கடேஷ், அக்ரி குகநாதன், ஆர். பெரியசாமி ஆகியோர் மரங்களின் முக்கியத்துவத்தை பற்றி அனைவரும் எடுத்து கூறி சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினர் மாவட்ட கல்வி அலுவலர் பணி நிறைவு, முனைவர் மு.ஆ.உதயக்குமார் அவர்கள் பேசும்போது ஆர். பட்டணம் டாக்டர் கலாம் பசுமை இயக்கம் மற்றும் கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா முன்னாள் மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகள் நடும் பசுமைத் திருவிழா இரா. பட்டணம் பொன்மலை திருத்தலத்தில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே இயற்கை சூழ்ந்த கோயில்கள் நடுவில் அமைத்துள்ள இந்த பகுதியில் இந்த மரக்கன்றுகள் நடும்போது ஆக்சிசன் மக்களுக்கு எந்த அளவுக்கு முக்கியம் அதேபோன்று மரங்கள் நடுவது அனைவருக்கும் பயனுள்ளது என அனைவரும் அறிய வேண்டும், இது போன்ற சமூக நற்பணிகளில் இளைஞர்கள் முன்வந்து மரம் நடும் பண்புகளை மேம்படுத்த வேண்டும், பல பணி சுமைகள் அனைவருக்கும் இருக்கும் வேலையில் இதற்கு முக்கியத்துவம் அளித்து வரும் அனைவருக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். மேலும் இயக்குனர் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்கள், ஆன்மிக பைங்கொழந்து ஆன்மிக சொற்பொழிவை டாக்டர் எஸ். குருவாயூரப்பன் பேசினார். அப்போது இயற்கை வளங்கள் சூழ்ந்த இந்த நவ கால பைரவர் அமைந்துள்ள இப்பகுதி சிறப்பாக பல்வேறு மரங்கள் நட்டு பராமரித்து வருகின்றனர். மேலும் இந்த இடத்திற்கு அழகு சேர்க்கும் வகையில் இன்னும் பல்வேறு மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் பசுமை இயக்கத்தினர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். டாக்டர் கலாம் பசுமை இயக்கத்தின் செயலாளர் ஆவின் துணை பொது மேலாளர் பணி நிறைவு டாக்டர். எம். செங்குட்டுவன் நன்றியுரையாற்றினார்.
Next Story
