பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய மனதின் குரல் நிகழ்ச்சி மாநிலத் துணைத் தலைவர் Dr. K.P. இராமலிங்கம் உள்ளிட்டோர் மனதின் குரல் நிகழ்ச்சியை பார்வையிட்டனர்

பிரதமர்  நரேந்திர மோடி உரையாற்றிய மனதின் குரல் நிகழ்ச்சி மாநிலத் துணைத் தலைவர் Dr. K.P. இராமலிங்கம் உள்ளிட்டோர் மனதின் குரல் நிகழ்ச்சியை பார்வையிட்டனர்
X
பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய மனதின் குரல் நிகழ்ச்சி மாநிலத் துணைத் தலைவர் Dr. K.P. இராமலிங்கம் உள்ளிட்டோர் மனதின் குரல் நிகழ்ச்சியை பார்வையிட்டனர்
பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றிய மனதின் குரல் நிகழ்ச்சியை பார்வையிட, நாமக்கல் மாவட்டத்தில், பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இராசிபுரம் அடுத்த R. பட்டணம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் Dr. K.P. இராமலிங்கம் உள்ளிட்டோர் மனதின் குரல் நிகழ்ச்சியை பார்வையிட்டனர். பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில், தேசத்திற்கு பயன்படக்கூடிய மற்றும் எதிர்காலத்தில் வலிமையான பாரதத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை கூறியுள்ளார் என்று Dr. K.P. இராமலிங்கம் தெரிவித்தார்*. பிரதமர் திரு. நரேந்திர மோடி, வானொலி வழியாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய மன் கி பாத் , மனதின் குரல் 123-வது நிகழ்ச்சியை நாடு முழுவதும் இன்று (29.6.2025) பலரும் பார்வையிட்டனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த R. பட்டணம் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை, மாவட்ட பாஜக சார்பில் அனைவரும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாஜக மாநில துணைத்தலைவர் Dr. K.P. இராமலிங்கம், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் , மனதின் குரல் நிகழ்ச்சியை பார்வையிட்டனர். நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் Dr K.P. இராமலிங்கம், 123-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் ஆற்றிய மனதின் குரல் மூலம் நாட்டு மக்களின் பல்வேறு எண்ணங்களை தனது உரையில் பிரதிபலித்தார். ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினம் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் பிரதிபலிப்பாக புனித யாத்திரைகள் அமைந்துள்ளதை பிரதமர் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், 50 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட அவசரநிலை பிரகடனம், அதனால் பாதிக்கப்பட்டவர்கள், மிசா கொடுஞ்சட்டம் குறித்து பிரதமர் நினைவு கூர்ந்தார். தேசத்திற்கு பயன்படக்கூடிய மற்றும் எதிர்காலத்தில் வலிமையான பாரதத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளும் அளவிற்கு பிரதமரின் மனதின் குரல் அமைந்திருந்தது. ஏற்கனவே கட்சி தலைமை கூறியபடி அதிமுக- பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி 2026-ல் திமுக-வை அகற்றி ஆட்சி அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். இன்று, அதிமுகவினருடன் இணைந்து, பாரத பிரதமரின் மனதின் குரலை பார்வையிட்டு, 2026-ல் அதிமுக தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான சபதம் எடுத்துள்ளோம் என்றார். பிற கேள்விகளுக்கு பதில் அளித்த டாக்டர் கே பி இராமலிங்கம், மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ஏற்கனவே கடந்த கால வரலாற்றைத்தான் செய்தியாக அளித்தோம். எனவே, பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்மீது பாஜகவுக்கு என்றும் தனி மரியாதை உள்ளது. திமுக நடத்தும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம், இந்த மாநிலத்திற்கு பிடித்த பிணி ஆகும். போதைப் பொருள் உபயோகித்ததாக நடிகர்கள் கைது செய்யப்படும் சம்பவத்தில், முதலில் சபரிசனின் துணைவியார் செந்தாமரை என்பவரை கைது செய்திருக்க வேண்டும். ஏனென்றால் போதைப்பொருள் தொடர்பான வருமானத்தில்தான் அவர்கள் திரைப்படம் எடுத்தார்கள் என்பது தெரியவந்துள்ளது. தமிழக வெற்றி கழகம், விசிக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தமிழ்நாட்டின் மக்கள் நலனை விரும்புவோர், திமுக ஆட்சியை அகற்ற ஒன்றாக இணைய வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம் என்பதை தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறோம். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டன. ஜனநாயக மரபை காக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளதால்தான், திமுக ஆட்சியை கலைக்காமல் உள்ளார். மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து திமுக அரசு தேர்தல் ஆதாயம் தேடுவதற்காகவே புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அரசு பணத்தை எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்ற எண்ணத்தில் திமுக அரசு உள்ளது. இதுவெல்லாம் தேர்தலுக்காக செய்யப்படும் வேலை என்பது பொதுமக்களுக்கு தெரியும். எனவே திமுகவிற்கு அவர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ஏற்கனவே, பாமக, திமுகவிற்கு எதிராகவே உள்ளது. தற்போது பாமகவில் உள்ள சூழ்நிலை எந்த விதத்திலும் பாஜக கூட்டணியை பாதிக்காது. பாமக தலைவர் இராமதாஸ் ஒருபோதும் திமுகவை ஆதரிப்பதில்லை என தெளிவுபடுத்தி விட்டார் என்றும் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே பி இராமலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட பாஜகவினர், வள்ளி ராஜா, சுகன்யா, சேதுராமன், லோகேந்திரன், அன்பரசு , வேலு (எ) வேல்முருகன்,மற்றும் அதிமுக நிர்வாகிகள் பட்டணம் பாலசுப்பிரமணியம், பழனிவேல், எல்.எஸ்.மணி, மற்றும் பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story