தனது இறுதி மூச்சு வரை தமிழுக்காகவும், சிலப்பதிகாரத்திற்காகவும் பெரும் தொண்டாற்றியவர் சிலம்பொலியார்! -நாமக்கல்லில் நடைபெற்ற சிலப்பதிகாரப் பெருவிழாவில் Dr.P.V.செந்தில் புகழாரம்

சிலப்பதிகாரத்தை சிலாகித்து செல்லப்பனார் பேசுவதைக் கேட்டு பெரும் உவகை கொண்ட ம.பொ.சி.‌ என்றழைக்கப்படும் ம.பொ.சிவஞானம் அவர்கள் ஐயாவிற்கு "சிலம்பொலி" என்ற பட்டத்தை வழங்கினார்.
சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில் சிலப்பதிகாரப் பெருவிழா மற்றும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் 96வது பிறந்தநாள் விழா என இருபெரும் விழாக்கள் நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செய்தித் தொடர்பாளரும், ஓபிசி பிரிவின் மாநில துணைத் தலைவருமான டாக்டர் P.V.செந்தில் பங்கேற்று மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து செந்தில் அவர்கள் பேசும் போது....
மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டவர். தனது இறுதி மூச்சு வரை தமிழுக்காகவும், சிலப்பதிகாரத்திற்காகவும் தன்னால் இயன்ற அளவு தொண்டுகளைச் செய்து வந்தார். சிலப்பதிகாரத்தை செல்லப்பனார் பேசுவதைக் கேட்டு பெரும் உவகை கொண்ட ம.பொ.சி.‌ என்றழைக்கப்படும் ம.பொ.சிவஞானம் அவர்கள் ஐயாவிற்கு "சிலம்பொலி" என்ற பட்டத்தை வழங்கினார். அன்றிலிருந்து அன்னாரது கடைசி மூச்சு வரை அவரது பெயரை "சிலம்பொலி" செல்லப்பனார் என்று மிகுந்த மரியாதையுடனும் மதிப்புடனும் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் முதல் அனைவரும் அழைத்து மகிழ்ந்தனர்.இத்தகைய பெருமகனாரின் புகழை இதுபோன்ற விழாக்களின் மூலமே உலகறியச் செய்ய முடியும் என்றும் அப்போதுதான் இன்றைய வளரும் இளம் தலைமுறையினருக்கு அவரது புகழையும் பெருமையையும் எடுத்துச் செல்ல முடியும் என்றும் கூறினார். இந்த இருபெரும் விழாக்கள் மிகப்பெரிய அளவிலான வெற்றியைப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாழ்த்தினார்.
Next Story