திமுக பலமாக இல்லை. கூட்டணி கட்சிகள் தான் பலமாக உள்ளது- EPS

திமுக பலமாக இல்லை. கூட்டணி கட்சிகள் தான் பலமாக உள்ளது- EPS
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது அதிமுகவின் 82 மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டம் 80 சதவீதம் நடந்து முடிந்துள்ளது. சேலத்தில் உள்ள மற்ற தொகுதிகளுக்கு முன்மாதிரி தொகுதியாக எடப்பாடி தொகுதி விளங்குகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம் ஆனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைவோம். 2021 ல் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் 94000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். உதயநிதி சொன்னதை போல் பைனல் விளையாட்டின் வெற்றி கோப்பையை அதிமுக பெரும். ஊடகங்கள் பொய் செய்தியை பரப்பி வருகின்றனர் உண்மை ஒரு நாள் மக்களுக்கு தெரியும் அப்போது திமுக படுதோல்வி அடையும். அதிமுக என்னும் வலிமையான இயக்கத்தை திமுக சிதைக்க நினைக்கிறது.  திமுக பலமாக இல்லை. கூட்டணி கட்சிகள் தான் பலமாக உள்ளது. கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக விழுந்து விடும். எந்த கட்சிக்கும் வெற்றி தோல்வி நிரந்தரம் கிடையாது.  எம்ஜிஆர் கட்சி தொடங்கியிருந்த நாள் முதல் 11 சட்டமன்ற தேர்தலில் 7 தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அதிமுகவினர். அதிமுக அரசாங்கத்தால் தான் இந்தியாவில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்கியது. 2011 தேர்தலில் சேலத்தில் உள்ள 11தொகுதிகளில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். சிலர் வேண்டுமென்று திட்டமிட்டு அதிமுகவை குறைத்து மதிப்பிடுகிறார்கள். சக்கரம் சுழன்று கொண்டு இருக்கும் இன்றைக்கு இருக்கும் ஆட்சி நாளை இல்லாமல் போகலாம். நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது என்று என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். இன்று இருக்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் நடந்த திட்டத்தை தான் திறந்து வைக்கிறார்கள். அதிமுக கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக எட்டிக்குட்டைமேட்டில்  கட்டப்பட்டுள்ள பி.எட் கல்லூரியை திறக்கவில்லை. ஆயிரம் ஏக்கரில் தலைவாசலில் கால்நடை பூங்கா ஆராய்ச்சி நிலையம் அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்டது. வேண்டுகின்றே அதனை திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. அதிமுக அரசு அமைந்ததும் கால்நடை பூங்காவை நாங்களே திறப்போம். உதயநிதி ஒரே செங்கல் தூக்கிக்கொண்டு நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது  திமுக ஆட்சிக்கு வந்து 41 மாதத்தில் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற வில்லை உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியது தான் திமுக சாதனை. ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை கொடுத்து வாய் பேசும் மனிதர்களுக்கும், வாய் பேசாத ஆடு,மாடு போன்ற  ஜீவன்களுக்கும் மருத்துவ உதவியை செய்தது அதிமுக அரசு. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் மகளீர்க்கு இலவச பயணம் என்று பேருந்தின் முன்னும் பின்னும் பெயிண்ட் அடித்து அந்தர் பல்ட்டி அடித்த கட்சி திமுக. சேலம் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக. 568 கோடியில் வறண்ட 100 ஏரிகளுக்கு மேட்டூர் உபரி நிரப்பும் திட்டம். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றபட்டு முதலில் ஆறு ஏரிகளுக்கு நிரப்பப்பட்டது. இந்தத் திட்டத்தையும் திமுக கிடைப்பில் போட்டு உள்ளது. நெசவு தொழிலும், விசைத்தறி தொழிலும் நலிவடைந்து வருகிறது நெசவு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஏரி வேலைக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வாரிசு அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கருணாநிதி குடும்பத்தில் இருந்து மட்டும் தான் அதிகாரத்திற்கு வர முடியும்.  திமுக மன்னராட்சி முறையை கொண்டுவர பார்க்கிறார்கள் மன்னராட்சி தொடர வேண்டுமா? என்பதை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தீர்மானிப்பார்கள். ஸ்டாலின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக துணை முதலமைச்சர் பதவி உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 50 ஆண்டு காலமாக கட்சிக்கு உழைத்து படிப்படியாக உழைத்து இந்த பதவிக்கு வந்துள்ளேன். ஸ்டாலின் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று பரவலாக பேசப்படுகிறது. அதன் காரணமாகத்தான் உதயநிதி அவசரமாக துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மிஷாவில்  கைதாகி சிறை சென்றவர்கள் வெளியில் கிடக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக ஜெட் வேகத்தில் பதவி பெற்றுள்ளார்.  வேண்டுமென்று திட்டமிட்டு  அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு போடுகிறார்கள்  இன்னும் 15 அமாவாசை தான் உங்களுக்கு உள்ளது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் எத்தனை முறை  வந்தாலும் சேலம் அதிமுகவின் கோட்டை. அதிமுக ஆட்சியில் 36 ஆயிரம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து. அதனை எதிர்கொண்ட கட்சி அதிமுக. திமுக ஆட்சியில் கொலை பட்டியல் வெளியிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக விளங்குகிறது. காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்.ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான தமிழக காவல்தூறையில் உள்ள காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றி அதிமுக ஆட்சிக்கு வரும் அப்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணபடும் என கூறினார்.
Next Story