வெறும் அரசியல் பேசி விளம்பரம் தேடுபவர் நாங்கள் அல்ல - ER.ஈஸ்வரன்

வெறும் அரசியல் பேசி  விளம்பரம் தேடுபவர் நாங்கள் அல்ல - ER.ஈஸ்வரன்
எடப்பாடி அருகே நெடுங்குளம் ராசிபுரம் தனி கூட்டு குடிநீர் திட்டத்தை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 523 ஊரக குடியிருப்புகளுக்கான எடப்பாடி அருகே நெடுங்குளம்  காவிரி கரையோர பகுதிகளில் தனி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மத்திய மாநில அரசின் நிதி உதவியின் மூலம் சுமார் 855 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் திட்டம் 2052 ஆம் ஆண்டில் மக்கள் தொகையை தோராயமாக கணக்கிட்டு சுத்திகரிக்கப்பட்ட  குடிநீர் வழங்கும் விதமாக எடப்பாடி அருகே நெடுங்குளம் காட்டூர் பகுதியில் நீரேற்று நிலையம் மூலமாக சுத்தம் செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் அங்கிருந்து சுமார் 1258 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய்கள் அமைத்து ராசிபுரம் நகராட்சி 8 பேரூராட்சிகள், நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.    இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் எடப்பாடி அருகே நெடுங்குளம் காவிரி கரையோர பகுதியில் அமைக்கப்பட்டு வரும்  நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் அதிகாரிகளுடன் நவம்பர் 5ஆம் தேதி நேரில் சென்று கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில்:  மத்திய மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டம் திட்டமிட்டபடி பணிகள் நிறைவு பெறும் தருவாயில் இருப்பதாகவும், இந்த வருட இறுதிக்குள் இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்தார்.   இதனை தொடர்ந்து கூறுகையில் திமுகவுடன் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து கூட்டணியில் நீடிக்கும்.  தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றுதான் என்று விஜய் கூறிய கருத்துக்கள் எல்லோரும் அரசியல் செய்கின்றனர், எவ்வாறு விளம்பரப்படுத்திக் கொள்வது என்று யோசிக்கிறார்கள்  கொங்குநாடு மக்கள் கட்சியை பொறுத்தவரை எந்த அளவிற்கு வளர்ச்சி கொண்டுவர முடியும் என்பது குறித்து மட்டும் தான் யோசித்து வருகிறோம்.   தமிழக முதலமைச்சரை பொறுத்த வரை  யார் என்ன பேசினாலும்  மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை தாமதம் இன்றி செய்யச் சொல்லி இருக்கிறார், அதன் அடிப்படையில் எங்கள் பகுதி மக்களுக்கான வளர்ச்சி குறித்து என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம் வெறும் அரசியல் பேசி நாங்கள் விளம்பரம் தேடுபவர் அல்ல. அதேபோல் முதல்வரும் அப்படியல்ல.  எடப்பாடி பழனிச்சாமி குடும்ப அரசியலுக்கு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்  முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும் என்று கூறியது குறித்து கேட்டதற்கு  ஒரு அரசியல் கட்சியில் உள்ள தலைவர்கள், தொண்டர்கள் அந்தக் கட்சியில் யார் தலைவராக வரவேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள் தான் வர முடியும், திமுகவில் தலைவருக்கு பிறகு யாரை முன் நிறுத்த வேண்டும் என்பது அந்தக் கட்சி முடிவு எடுக்க வேண்டியது. ஒரு கட்சியில் யார் தலைவராக வேண்டும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்ய முடியாது.  2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் முதல்வர் தலைமையிலான கூட்டணி தேர்தல் காலத்தில் மகத்தான வெற்றியை பெரும் இன்னும் ஏராளமான திட்டங்களை தமிழக முதல்வர் அறிவிப்பார் அதனை முன்னிறுத்தி நாங்கள் களத்தில் நிற்போம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார்.
Next Story