கரூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு விமானப் பயணம் – Flight of Fantasy சிறப்பு திட்டம் !

அரசு பள்ளி மாணவர்களுக்கு மறக்க முடியாத விமானப் பயண அனுபவம்.
கரூர் சோமூர் அரசு பள்ளியில் படிக்கும் 30 மாணவர்களும் 3 ஆசிரியர்களும், கரூர் ரவுண்ட் டேபிள் மற்றும் மதராஸ் ஸ்டெர்லிங் ரவுண்ட் டேபிள் இணைந்து நடத்திய “Flight of Fantasy” திட்டத்தின் மூலம் முதல்முறையாக விமானத்தில் பயணிக்கும் அனுபவத்தை பெற்றனர். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை வழியனுப்பி, பரிசுகள் வழங்கினார். ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள், “கல்வியினால் மட்டுமே சுதந்திரம் கிடைக்கும் என்ற நோக்கில், இதுவரை நாடு முழுவதும் 5000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டித் தந்துள்ளோம். மாணவர்கள் உலகத்தை அறிந்து கொள்ள இந்த திட்டம் உதவும்,” என தெரிவித்தனர். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, மாணவர்கள் கோவை – சென்னை விமானப் பயணத்துடன் விஜிபி மரைன் கிங்டம், பிளானிடோரியம், பீச், மால் உள்ளிட்ட இடங்களை சுற்றிக் காணும் வாய்ப்பும் பெற்றனர்.
Next Story