கோவை: Focus EDUMATICS -இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை !

கோவை: Focus EDUMATICS -இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை !
X
கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வந்த Focus EDUMATICS எனும் ஐடி நிறுவனம் மூடப்பட்ட விவகாரத்தில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது
கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வந்த Focus EDUMATICS எனும் ஐடி நிறுவனம் மூடப்பட்ட விவகாரத்தில் நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொழிலாளர் நல அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நிறுவனம் மற்றும் அரசு தொழிலாளர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். CITU தொழிற்சங்கத்தினர் பாதியில் வெளியேறினர். 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வருகை புரிந்த நிலையில், குறிப்பிட்ட சில ஊழியர்கள், நிறுவன மேலாளர்கள், தொழில்துறை கூடுதல் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பணிக்கொடை பணிபுரிந்த காலத்துக்கும், அனுபவத்துக்கும் ஏற்ப வழங்குவது, PF தொகையை பெறுவதற்கான அனுமதி உள்ளிட்ட விண்ணப்பங்களில் கையொப்பமிடுதல், பணியாளர்களின் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்தல், பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிக்கான செக்கை திரும்ப வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. பேச்சுவார்த்தையில், ஒரு மாதம் சம்பளம், PF, ESI அனைத்தும் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் பகுதி நேர பணியாளர்களுக்கு எந்த முடிவும் எட்டப்படாததால் பேச்சு வார்த்தை தொடர்கிறது.
Next Story