போலீசாரின் வாகனங்களில் GPS கருவி
Madurai King 24x7 |10 Jan 2025 2:02 PM GMT
மதுரையில் போலீசாரின் மொத்தம் 101 ரோந்து வாகனங்களில் GPS கருவி பொருத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மதுரை மாநகரில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் போலிசிங் திட்டத்தின் படி அவசரகால 100 அழைப்பு புகார்கள் மூலம் காவல் பணியை துரிதபடுத்தவும் காவல்துறை வாகனங்களின் நகர்வுகளை துல்லியமாக கண்காணிக்கவும் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களின் மீதான குறைகளை விரைவாக நிவர்த்தி செய்யும் பொருட்டும் மதுரை மாநகரில் காவல் கட்டுபாட்டு அறை மூலம் இயங்க கூடிய 63 இரு சக்கர ரோந்து வாகனங்கள், 21 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், 9 Delta ரோந்து வாகனங்கள் மற்றும் 8 வழிக்காவல் ரோந்து வாகனங்கள் உட்பட்ட 101 காவல் வாகனங்களிலும் Rs.3,83,500/- மதிப்பீட்டில் GPS கருவிகள் பொருத்தப்பட்டு காவல் வாகனங்களை ரோந்து பணிக்கு தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம் மற்றும் ஒழுங்கு S.டேவிட்சன் தேவஆசீர்வாதம், I.P.S., அவர்கள் இன்று (ஜன.10) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதுரை மாநகர் காவல் ஆணையர் J.லோகநாதன், I.P.S., மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் மற்றும் துணை ஆணையர்கள் தெற்கு, வடக்கு மற்றும் தலைமையிடம் மற்றும் காவல் ரோந்து வாகனங்களில் GPS பொருத்துவதற்கு பெரும் உதவி செய்த City Union Bank நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story