திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற அனுமதி கிடைத்ததால்iதீபங்கள் ஏற்றி கொண்டாட்டம்

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற அனுமதி கிடைத்ததால்iதீபங்கள் ஏற்றி கொண்டாட்டம்
X
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றஅனுமதி கிடைத்ததால்தீபங்கள் ஏற்றி குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் கொண்டாடப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி கிடைத்ததால், தீபங்கள் ஏற்றி குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் கொண்டாடப்பட்டது. பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடந்த விழாவில் பா.ஜ.க. மாவைய மக்கள் சேவைப்பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல், இந்து முன்னணி நகர தலைவர் பாலாஜி தலைமை வகித்தனர். பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி தொண்டர்கள், நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்று, முருகன் சுவாமி திருவுருவப்படம் வைத்து, தீபங்கள் ஏற்றியும், மலர்கள் தூவியும், தீபாராதனை காட்டியும் கொண்டாடினர். பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
Next Story