தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்ற தொகுதி I , I A தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்ற தொகுதி I , I A தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தொகுதி I, IA தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில், ரோவர் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் இன்று (15.06.2025 நடைபெற்றது. இத்தேர்வு நடைபெற்ற 3 மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுத செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளையும், மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் தொகுதி I, IA தேர்வெழுத 2,539 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,974 நபர்கள் தேர்வெழுத வந்தனர். மீதமுள்ள 565 நபர்கள் தேர்வெழுத வரவில்லை. தேர்வு நடைமுறைகளை கண்காணிக்க பறக்கும் படை மற்றும் நடமாடும் குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி தேர்வு எழுதுவதற்கு அவர்களுக்கென தனி அறைகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் தேர்வெழுத உதவி செய்ய கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து தேர்வு மையத்திற்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தேர்வு எழுத வருகை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும், அமைதியான சூழ்நிலையும், போதுமான பாதுகாப்பு வசதியும், தடையின்றி மின்சாரமும் வழங்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Next Story




