கோவை எம்.பி.யுடன் முதல்முறையாக மாணவர்கள் Internship !

தமிழகத்தில் முதல்முறை – மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினருடன் பயணித்து இன்டர்ன்ஷிப் பயிற்சி எடுக்கின்றனர்.
தமிழகத்தில் முதல்முறையாக கல்லூரி மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினருடன் Internship மேற்கொள்ள உள்ளனர். கோவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாருடன் 11 அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் ஒரு மாதகாலம் Internship செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ‘யங் இந்தியா’ அமைப்பின் மூலம் 180 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், நேர்முகத் தேர்வில் 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் எம்.பி.யின் அலுவலக பணிகள், மக்களை அணுகும் விதம், நிதி ஒதுக்கீடுகள், அலுவலகங்கள் மற்றும் கூட்டங்கள் என அனைத்திலும் கலந்து கொண்டு அனுபவம் பெற உள்ளனர். முதல் நாளில் மாணவர்களை சந்தித்த எம்.பி. கணபதி ராஜ்குமார், இளைஞர்கள் அரசியல் மற்றும் ஜனநாயக பொறுப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என தெரிவித்தார். மேலும், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையரை சந்திக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும், டெல்லியில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரிலும் இவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
Next Story