சைபர் க்ரைம், இழந்த தொகையை மீட்டு உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ்கண்ணன் IPS.

சைபர் க்ரைம், இழந்த தொகையை மீட்டு உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ்கண்ணன் IPS.
சைபர் குற்ற வழக்குகளில் இழந்த பணம் ரூ.9,59,012/- தொகையை மீட்டு உரியவர்களிடம் நாமக்கல் காவல்துறையால் ஒப்படைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இருவேறு வழக்குகளில் காவல் அதிகாரிகள் துரித விசாரணை மேற்கொண்டு சைபர் குற்றவாளிகளின் வங்கி கணக்குகளில் இருந்து வழக்கின் புகார்தாரர்கள் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த தமிழேசன் என்பவர் போலி போதைபொருள் பார்சல் மோசடி மூலம் இழந்த பணம் ரூ. 8,77,336/- தொகையையும், நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் போலி கொரியர் மோசடி மூலம் இழந்த பணம் ரூ.81,676/- தொகையையும் மீட்டு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ராஜேஷ்கண்ணன் IPS மூலம் உரியவர்களிடம் இன்று 24.12.2024 ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. சைபர் க்ரைம் மோசடி பற்றி பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், மோசடியால் பாதிக்கப்பட்டால் தங்களது புகார்களை உடனுக்குடன் சைபர் க்ரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in மூலம் பதிவு செய்யுமாறு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், தெரிவித்துள்ளார்
Next Story