அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு
X
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு/ 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 13-06-2025 அன்று வரை விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் பதிவு செய்திட வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 134- உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம். இம்மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரம் குறித்து இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் இருப்பின் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரியிலும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை 94990 55881, 94990 55882 என்ற அலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும். ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை, 94990 55883, 94990 55884 என்ற அலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும். குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை 98946 97154 என்ற அலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை 94884 51405 என்ற அலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story