இராசிபுரத்தில், பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் K.P. இராமலிங்கம் பேட்டி..

X
Rasipuram King 24x7 |2 Jun 2025 6:46 PM ISTஇராசிபுரத்தில், பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் K.P. இராமலிங்கம் பேட்டி..
தமிழகத்தில், மத்திய பாஜக அரசின் திட்டங்களை குறித்து ஒரு சிலர் பொய்யான தகவல்களை கூறி வருவதை தகர்த்தெறியும் வகையில், மத்திய பாஜக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்குவதற்காக மாபெரும் பிரச்சார இயக்கம் தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது என்றும், மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என்றும்,, நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் K.P. இராமலிங்கம் பேட்டி.. நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், ( 2.6.2025) (தமது 72-வது பிறந்த நாளை முன்னிட்டு) நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் / சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளர் டாக்டர் K.P. இராமலிங்கம், தான் பயின்ற ஆசிரியர் / எழுத்தாளர் மு. இராமசாமி என்பவரிடம் ஆசி பெற்றார். இதனைத் தொடர்ந்து, இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பாரதமாதா திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி, அப்பகுதியில் உள்ள, முன்னாள் முதல்வர் MGR சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதன் பின்னர் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனக்கூறி பொதுமக்களிடம் அதற்கான அழைப்பிதழ்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து இராசிபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை K.P. இராமலிங்கம் வழங்கினார். பின்னர் தமது இல்லத்தில் கேக் வெட்டி உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் அவருக்கு பொது அமைப்பினர், அனைத்து கட்சியினர் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் K.P. இராமலிங்கம், வருகின்ற ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாட்டை மதுரையில் இந்து அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நடத்துவது என தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, மாநிலம் முழுவதும் பாஜக-வின் அனைத்து அமைப்பினரும் வீடு வீடாக சென்று முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்து வருகின்றனர். மேலும், தமிழகத்தில், தேசியமும் தெய்வீகமும் அடிப்படை இலட்சியமாகக் கொண்ட ஆட்சி அமைப்பதற்கு அடித்தளமாக இந்த மாநாடு அமையும். ஆன்மிகத்தை நீண்ட காலமாக சாடி வந்தவர்களுக்கு தக்க பதிலடி இந்த மாநாடு தரும். பல ஆண்டுகளாக தமிழகம்தான் சைவ, வைணவ தளங்களாக / முருகப்பெருமான் தலங்களாக அனைத்து கோவில்களின் மூலமாக உள்ளது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகளாக ஆன்மிகம், இந்துக்களின் தெய்வ நம்பிக்கை, வழிபாட்டு முறை, வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றுக்கு எதிரான பிரச்சாரத்தால் பாதிப்பு ஏற்படுவதை இந்து அமைப்புகள் இனியும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகின்ற வகையில், அவற்றை பாதுகாப்பது நமது பொறுப்பு என்ற சூலுரையோடு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. அதில் பெருந்திரளான முருக பக்தர்கள் குடும்பத்தோடு பங்கேற்கின்ற வகையில் அனைத்து அமைப்புகளும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன. அனைவரையும் இந்த மாநாட்டிற்கு அழைத்து வருகிறோம். வருகின்ற 2047-ம் ஆண்டில் வலிமையான / வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதே பாஜகவின் தத்துவார்த்த ரீதியிலான சங்கல்பமாக உள்ளது. இதுவரை 11 ஆண்டுகாலம் பல்வேறு புதிய திட்டங்களை சாதனைகளை உலகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்ற திட்டங்களை பாஜக மத்திய அரசு செயல்படுத்துகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சிந்தூர் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ராணுவ தளவாடங்கள் அனைத்தும் நமது நாட்டிலேயே நமது வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டது ஆகும். இதற்கெல்லாம் மாற்றுக் கருத்தை தமிழகத்தில் ஒரு சிலர் கூறி வருவதை தகர்த்தெறிவதற்காக, மாபெரும் பிரச்சார இயக்கத்தை விரைவில் தமிழகத்தில் நடத்த இருக்கிறோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அங்க பெறுகிற கட்சியை உருவாக்குகிற வகையில் வகையிலும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுகின்ற வகையிலும் திட்டமிட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்என்றார். தமிழகத்தின் அடையாளங்களை பாஜக மறைப்பதாக திமுக கூட்டத்தில் முதலமைச்சர் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் K.P. இராமலிங்கம், அவரின் (முதல்வரின்), இயலாமை காரணமாகவும், அவர்மீதும், அவரது குடும்பத்தின்மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் சுற்றி வளைத்திருக்கின்ற இந்த சூழ்நிலையில் பதட்டத்திலே அவர் பதறுகிறார். எந்த அடையாளத்தை பாஜக தமிழகத்தில் அளித்திருக்கிறது என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். தமிழகத்தின் அடையாளங்களான தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தமிழக அரசு சின்னத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலய கோபுரம், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம் போன்றவை தமிழகத்தின் அடையாளங்கள் ஆகும். நமது முன்னோர்கள்,தமிழ்ச்சங்கம், கடையெழு வள்ளல்கள் ஆன்மிகத்தின் வழியே தமிழ் வளர்த்தார்கள். ஆனால் தற்போது அந்த அடையாளங்களை திமுக தான் அழித்து வருகிறது. ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் அந்த அடையாளங்களை அழித்து வருகிறார். அவற்றை மறைப்பதற்காகவே பாஜக தமிழக அடையாளத்தை மறைப்பதாக உண்மைக்கு மாறான தகவலை கூறி வருகிறார். இனிமேல் இதுபோன்ற வாதங்களை கூறாமல், நாட்டு மக்களுக்கு என்ன செய்துள்ளார்? என்னென்ன சாதனைகளை செய்துள்ளார்? அதன் மூலம் எந்தெந்த சமுதாயம் வளர்ச்சி அடைந்துள்ளது? என்பதை முதல்வர் கூற வேண்டும். அவருக்கு அடையாளத்தை வழங்கி வரும் பாஜகவை எதிரியாக கருதி பேசுவதை அவர் தொடர்ந்து செய்திட வேண்டும். ஏனென்றால் இப்போது பாஜக தான் அவருக்கு அடையாளத்தை வழங்கி வருகிறது. தமிழ் சமுதாயத்தை பாதுகாத்து, திமுக ஆட்சியை அகற்றுவது என்பது எங்களது மூலநோக்கம். அதை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என கூறினார். பாட்டாளி மக்கள் கட்சி பிரச்சனை குறித்து கேள்விக்கு பதில் அளித்த கே.பி. ராமலிங்கம், ஸ்டாலினுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே உள்ள பெரிய பிரச்சனையை விட, பாமகவின் பிரச்சனை சிறியதுதான். திமுக அரசின் ஆட்சியில் முறைகேடாக ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை பிரிப்பதில் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் சபரீசன் ஆகியோருக்கு இடையே பெரும் பிரச்சனை உள்ளது. ஊழல் பணத்தை பிரிப்பதால் அது வெளியே பிரச்சனையாக வரவில்லை. திமுகவில் புதிய அணிகள் தொடங்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த KPR, அந்த அணிகளை வரவேற்கின்ற அதே நேரத்தில், அவர்கள் சில அணிகளை ஆரம்பிப்பது மிகப்பெரிய அயோக்கியத்தனத்தின் உச்சம். இதற்கு முன்பு திமுக அயலக அணி, ஆரம்பித்து ஹவாலா பணத்தை கொண்டு வந்து, போதை மருந்து கடத்தல், சினிமா படத்துக்கு நிதி உதவி, உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை செய்தனர். மாற்றுத்திறனாளிகளுக்காக இவர்கள் உண்மையாகவே நன்மைகளை செய்ய வேண்டும். ஆக, ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் எதிரான கட்சியாக திமுக செயல்படுகிறது. இவர்கள் ஆட்சியில் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை, கட்சியிலே அதிகாரப்பூர்வமாக சேர்த்து ஆதாயம் பெறுவதற்காக இதுபோன்ற அணிகளை உருவாக்கி வருகிறார்கள். அவர்களோடு 30 ஆண்டுகாலம் இருந்து பார்த்தவன் நான் என்ற முறையில் இதனை குற்றச்சாட்டாக கூறுகிறேன். வெளிநாட்டுக்கு என்று தனியாக அணி தேவையில்லை. மேலும் மேலும் ஊழல் செய்வதற்குத்தான் அணிகளை உருவாக்குகிறார்கள். பிற கேள்விகளுக்கு பதில் அளித்த K.P. இராமலிங்கம், தமிழகத்தில் எங்கள் அணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவார். தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எங்கள் நோக்கமாகும். திமுகவை ஏன் அகற்ற வேண்டும் என்பதே எங்களின் பிரதான நோக்கமாக உள்ளது என்றும் இராசிபுரத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் சேலம் பெருங்குற்ற பொறுப்பாளர் டாக்டர் K.P. இராமலிங்கம் செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில், இந்திய அரசின் தேசிய தொழில்கள் வளர்ச்சி கவுன்சில் குழுவின்(NIDCC) தலைவர் Dr. K. ஜெயராமன், ராசிபுரம் நகர தலைவர் பி.வேலு(எ ) வேல்முருகன், மற்றும் பாஜக மாநில,மாவட்ட, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story
