மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் கலைஞர் குடும்ப நல நிதி வழங்கினார்..

மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் கலைஞர் குடும்ப நல நிதி வழங்கினார்..
மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் கலைஞர் குடும்ப நல நிதி வழங்கினார்..
ராசிபுரத்தில் கடந்த 3 மாதங்களில் மறைந்த 144 திமுக கழக உறுப்பினர்களுக்கு தலா ரூ.10,000 விதம் என, ரூ.14,44,000 மதிப்பில் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் கலைஞர் குடும்ப நல நிதி வழங்கினார்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் உடல் நல குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த திமுக கழக உறுப்பினர்களுக்கு கலைஞர் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.இதில் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் கலந்துகொண்டு கடந்த 3 மாதங்களில் உயிரிழந்த 144 திமுக கழக உறுப்பினர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி,அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.10,000 ரூபாய் வீதம் ரூ.14,44,000 ரூபாய் மதிப்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் குடும்ப நலநிதியை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் வழங்கினார்.அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் வாமலை திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, சீராப்பள்ளி பேரூராட்சி செயலாளர் செல்வராஜ், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி செயலாளர் அன்பழகன்,புதுப்பட்டி பேரூராட்சி செயலாளர் ஜெயக்குமார்,மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...
Next Story