ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் தொடங்கி வைத்தார்..

ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் தொடங்கி வைத்தார்..
X
ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் தொடங்கி வைத்தார்..
ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கட்டனாச்சம்பட்டி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி எண் 79 மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் தனது தொலைபேசி மூலம் OTP பெற்று தனது உறுப்பினர் சேர்க்கையை சேர்த்துக் கொண்டார். தொடர்ந்து தனது இல்லத்தின் கதவு மற்றும் காரில் ஓரணியில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம் செய்தும், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஓரணியில் தமிழ்நாடு என்ற ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் சேர்ந்தும், பொதுமக்களிடையே நாமக்கல் மாவட்டத்தில் கொண்டுவரப்பட்ட திட்ட வளர்ச்சி பணிகளை எடுத்துரைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளர் ஆர் எம் துரைசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story