நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் இந்த நிதியாண்டின் முடிவிற்குள் முழு இலக்கை எய்திவிடுவோம் நாமக்கல்லில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார் தகவல்.

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மூலம், இந்த ஆண்டு விவசாயம், பயிர்க் கடன், விவசாயம் சார்ந்த கடன் பிற கடன்கள் உள்பட சுமார் ரூ. 3,739 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை, ரூ. 1,911 கோடி வழங்கப்பட்டு, 51 சதவீத இலக்கை அடைந்துள்ளோம். பயிர் கடன் மட்டும் ரூ. 650 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைமை அலுவலகத்தில், 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2025-ஐ, வங்கியின் தலைவர் / பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார்கொடியேற்றி, தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. துர்கா மூர்த்தி தலைமை வகித்து, கூட்டுறவு வார விழா உறுதிமொழியினை வாசிக்க, பாராளுமன்ற உறுப்பினர், கூட்டுறவு பணியாளர்கள், கூட்டுவாளர்கள் என அனைவரும் உடன் வாசித்து ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.இதன்பின்னர், வங்கி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் K.R.N. இராஜேஷ்குமார்,அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2025, முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தொடங்கி வரும் 20-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.சமூக பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கூட்டுறவு இயக்கம், இங்கிலாந்து நாட்டில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டாலும் இன்று உலகம் முழுவதும் பரவி, ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பொருளாதார முன்னேற்றத்திற்காக அடித்தளம் அமைத்து வருகிறது. இணை அரசாங்க அமைப்பாக செயல்படும் கூட்டுறவு இயக்கம், அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மூலம், இந்த ஆண்டு விவசாயம், பயிர்க் கடன், விவசாயம் சார்ந்த கடன் பிற கடன்கள் உள்பட சுமார் ரூ. 3,739 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை, ரூ. 1,911 கோடி வழங்கப்பட்டு, 51 சதவீத இலக்கை அடைந்துள்ளோம். பயிர் கடன் மட்டும் ரூ. 650 கோடி வழங்கப்பட்டுள்ளது.இந்த நிதியாண்டின் முடிவிற்குள் முழு இலக்கை எய்தி விடுவோம்.அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில், வேளாண்மை, பால்வளம், கைத்தறி உள்ளிட்ட ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களின் பணிகளை குறிக்கும் வகையில் விழாக்கள் நடத்தப்படும்.நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டதிலிருந்து இந்த குறுகிய காலத்தில் மட்டும் 150 கோடி ரூபாய்க்கு மேல் வைப்பு நிதிகளை பெற்றுள்ளது.கூட்டுறவு வார விழாவில் பொதுமக்களுக்கு கூட்டுறவு சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சு, கட்டுரை, கவிதை, சமையல், கோலம் என்பன உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு இயக்கம் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த உடன் தான் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் உடனடியாக நிலுவையின்றி கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர், கூட்டுறவுத் துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி அதிகபட்சமாக பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும், 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.நாமக்கலில் வரும் 19-ம் தேதி, மாவட்ட அளவிலான 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிறைவிழா நிகழ்ச்சி நடைபெறும். தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் சார்பில்மாநில அளவிலான நிறைவிழா திருநெல்வேலியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்/ பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் நாமக்கல் மண்டல இணைப் பதிவாளர் க.பா. அருளரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள், கூட்டுறவாளர்கள், உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

Next Story