அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார் ஆகியோர், ரூபாய் 6.56 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டினர்.

X
Rasipuram King 24x7 |13 Nov 2025 7:29 PM ISTஅமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார் ஆகியோர், ரூபாய் 6.56 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டினர்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட, மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார் ஆகியோர், ரூபாய் 6.56 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பயணியர் நிழல் கூடம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி, 2 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தனர்... வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாங்குளம், மூலக்காடு, தொட்டிவலசு, பல்லவ நாயக்கன்பட்டி, 3 குமாரபாளையம், பொன்பரப்பிபட்டி, அனந்த கவுண்டம்பாளையம், நடுப்பட்டி ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், பயணியர் நிழற்கூடம் அமைத்தல், உள்ளிட்ட பணிகளுக்கு ரூபாய் 6.13 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தனர். இதேபோல, ரூபாய் 42.70 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், no. 3 குமாரபாளையம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம், அளவாய்ப்பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை ஆகியவற்றையும் அமைச்சர் மருத்துவர். மா. மதிவேந்தன், பாராளுமன்ற உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். இப்பணிகளின் மொத்த மதிப்பு ரூபாய் 6.13 கோடி ஆகும். இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், பாராளுமன்ற உறுப்பினர் K.R.N. இராஜேஷ் குமார் ஆகியோர், தமிழகத்தில் மாநில அரசு தமிழக அரசு அனைத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது அனைத்து திட்டங்களிலும் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அரசு திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் 854 கோடி ரூபாய் வழங்கி திட்டம் முடிவுறும் தருவாயில் உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முழுமையாக செய்து தரப்பட்டு வருகின்றன. தங்கம், உள்ளிட்ட பொருட்கள் விலைவாசி உயர்வு காரணம் மத்திய அரசு. மகளிர் உதவி தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன், போன்ற பல்வேறு திட்டங்கள் மக்கள் பயனடைந்து வருகின்றனர். விடுபட்ட மகளிருக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் கிராமப்புற பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் அட்மா குழு தலைவர் ஆர் எம் துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார் அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story
