காளப்பநாயக்கன்பட்டிபுதூரில் பால் உற்பத்தியாளர் சங்க சொசைட்டி திறப்பு விழா! K.R.N.இராஜேஸ்குமார் MP பங்கேற்பு

காளப்பநாயக்கன்பட்டிபுதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடத்தை, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளோர்க்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார்.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம்,காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் காளப்பநாயக்கன்பட்டி புதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடத்தை, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி திறந்து வைத்தார். இந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்படும் பாலின் அளவு, கால்நடைகள் வளர்ப்போர் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.மேலும் இந்த அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் பாலின் தரத்தை அறிய உதவும் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆவின் அலுவலரிடம் கேட்டறிந்தார்.
காளப்பநாயக்கன்பட்டி புதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழையும் வழங்கி அவர் பேசுகையில்......
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் அருகில் லத்துவாடி பகுதியில் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வருட இறுதிக்குள் அப்பணிகள் நிறைவடைந்து ஜனவரி மாதம் முதல், அதிநவீன பால் பதப்படுத்தும் ஆலை செயல்பட தொடங்கும். இதன்மூலம் நாமக்கல் மாவட்ட கால்நடை வளர்ப்போர் பெரிதும் பயன் பெறுவார்கள். அதேபோல, ஆவின் நிறுவனம் சார்பில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்த கட்டிடங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றும், பாரத ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்துள்ளதால், நாமக்கல் மாவட்டத்திற்கு என தனியாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விரைவில் திறக்கப்படும் என்றும் இராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் திமுக ஒன்றிய செயலாளரும், அட்மா குழு தலைவர் அ.அசோக் குமார்,காளப்பநாயக்கன்பட்டி பேரூர் செயலாளர் முருகேசன்,நாமக்கல் மாவட்ட ஆவின் பொது மேலாளர் இரா.சண்முகம், துணைப் பதிவாளர் ஐ.சண்முகநதி, கால்நடை மருத்துவர் செ.த.இராஜ்குமார், காளப்பநாயக்கன்பட்டி புதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அன்பழகன்,செயலாளர் சரஸ்வதி,பேரூராட்சி மன்றத் தலைவர் பாப்பு, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் ஷாம் சுந்தர்,அவைத் தலைவர் மதியழகன், பேரூர் பொருளாளர் ரகுபதி, மாவட்ட பிரதிநிதி வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story