ஓரணியில் தமிழ்நாடு சிறப்பு இயக்கத்தில் ஆறு இலட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு! K.R.N.இராஜேஸ்குமார் MP சூளுரை

X
Namakkal King 24x7 |1 July 2025 8:25 PM ISTஓரணியில் தமிழ்நாடு பரப்புரை விளக்க பொதுக்கூட்டம் ஜூலை 2 ஆம் தேதி புதன்கிழமை நாமக்கல் பூங்கா சாலையில் நடத்தப்பட உள்ளது. நமது மண், மொழி, மானம் காக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த இயக்கம் வரும் 45 நாட்களுக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் நடத்தப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில், திமுக நடத்தும் ஓரணியில் தமிழ்நாடு சிறப்பு இயக்கத்தில் 6 இலட்சம் உறுப்பினர்களை கட்சிக்கு சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் மாவட்ட செயலாளரும்/ பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அக்கட்சியின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து மாவட்ட திமுக செயலாளர் / பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து பேசினார். முன்னதாக, ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்த துண்டு பிரசுரங்களை அவர் வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது....ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தை கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த பரப்புரை முழக்கத்தின் நோக்கத்தை பொதுமக்களிடம் விளக்கி எடுத்துக் கூறிட செய்தியாளர் சந்திப்பு அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை விளக்க பொதுக்கூட்டம் ஜூலை 2 ஆம் தேதி புதன்கிழமை நாமக்கல் பூங்கா சாலையில் நடத்தப்பட உள்ளது. நமது மண், மொழி, மானம் காக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த இயக்கம் வரும் 45 நாட்களுக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடத்தப்படும்.தமிழ் இனம், மொழி ஆகியவற்றுக்கு எப்போதெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அதனைக் காக்க திமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.ஓரணியில் தமிழ்நாடு என்ற இந்த இயக்கம் நாமக்கல் மாவட்டத்தில் கிராமம், நகரம், மாநகரம், சிற்றூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் திமுகவினர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து இந்த இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறி மாபெரும் பிரச்சாரத்தை நடத்துவார்கள். மாநில அரசாங்கத்தின் உரிமைகளை குறைக்க மத்திய அரசு தொகுதி வரையறை என்ற பெயரில் அரசியல் உரிமைகளை பறிக்க முயற்சி எடுப்பதை மக்களிடம் எடுத்துச் செல்லப்படும்.நாமக்கல் திமுக கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில், அமைச்சர் மதிவேந்தன், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ ,நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர், குக்கிராமங்கள் வரை சென்று மக்களை சந்தித்து இந்த பணியை மேற்கொள்வார்கள். அதேபோல மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் இந்த இயக்கம் நடத்தப்படும். நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், குடும்பத்தினரை வீடு வீடாக சென்று திமுகவினர் சந்தித்து மொத்தம் 6 இலட்சம் உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நான்காண்டு கால திமுக சாதனைகள், மத்திய அரசு செய்திடும் அரசியல் அநீதி ஆகியவற்றை எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்ய உள்ளார்கள். அப்போது திமுகவினருக்கு உறுப்பினர் சேர்க்கை பணிகளையும் மேற்கொள்வார்கள்.இந்த பிரச்சார இயக்கம் 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். புதிய உறுப்பினர்கள் 6 இலட்சம் பேர் சேர்க்கப்பட உள்ள நிலையில் ஏற்கனவே நாமக்கல் மாவட்டத்தில், திமுகவில், சுமார் 2.50 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஜூலை 3-ம் தேதி முதல் பொதுமக்களை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சரின் திமுக அரசின் சாதனைகள் குறித்து எடுத்துச் சொல்லி திண்ணை பிரச்சாரம் செய்ய உள்ளோம். தமிழினத்தின் பண்பாடு, மொழி ஆகியவற்றை பாதுகாக்க இந்த பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறும். கிராமங்கள், வீதிகள் தோறும் சென்று எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் இந்த பிரச்சாரம் நடத்தப்படும். மண், மொழி, மானத்தை காப்பாற்ற, எதிர்கொள்ள வேண்டிய சவால்களை நியாயமான முறையில் எடுத்துக் கூற உள்ளோம்.மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் தாய் மொழியை மறந்து உள்ளூர் மொழிகள் மறக்கப்பட்டு ஹிந்தி பிரதான மொழியாக வடிவமைப்பை பெற்றுள்ளது. அதுபோன்ற நிலை தென்னிந்தியாவிற்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பிரச்சாரம் நடத்தப்படுகிறது. பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி செய்யும் தமிழக முதலமைச்சர், இனம், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கியுள்ளார். இதுதான் திராவிட இயக்கத்தின் முக்கிய இலட்சியமாகும் என்று நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் / பாராளுமன்ற மாநிலங்களாக உறுப்பினர் கே.ஆர்.என் இராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார்.இந்த பேட்டியின் போது திமுக ஆதி திராவிடர் நலக்குழு மாநிலத் துணைத் தலைவர்/ ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ் மூர்த்தி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம் எம்எல்ஏ, சேந்தமங்கலம் பொன்னுசாமி எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
