திருச்செங்கோடு K.S.ரங்கசாமி காலேஜ் ஆப் டெக்னாலஜியில், 2 நாள் ஒளிமயம் 4.0, 36 மணி நேர ஸ்டார்ட் அப் பூட் கேம்ப் துவக்க விழா
Tiruchengode King 24x7 |23 Dec 2025 5:36 PM ISTதமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் டி.என் மற்றும் திருச்செங்கோடு K.S.ரங்கசாமி காலேஜ் ஆப் டெக்னாலஜி, யங் இண்டியன்ஸ் ஆகியவை இணைந்து நடத்தும் 2 நாள் ஒளிமயம் 4.0, 36 மணி நேர ஸ்டார்ட் அப் பூட் கேம்ப் துவக்க விழா கேஎஸ்ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள விஸ்வேஸ்வரய்யா ஹாலில் நடைபெற்றது.
இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கம் தரவும், அவர்களது துவக்கத்தை கூர்மைப் படுத்தவும் மாணவ தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் டி.என் மற்றும் திருச்செங்கோடு K.S.ரங்கசாமி காலேஜ் ஆப் டெக்னாலஜி, யங் இண்டியன்ஸ் ஆகியவை இணைந்து நடத்தும் 2 நாள் ஒளிமயம் 4.0, 36 மணி நேர ஸ்டார்ட் அப் பூட் கேம்ப் துவக்க விழா கேஎஸ்ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள விஸ்வேஸ் வரய்யா ஹாலில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் R கோபால கிருஷ்ணன் தலைமையில் நடந்த முகாமை தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் டி.என். துணைத் தலைவர் முதன்மை அலுவலர் சிவக்குமார் பழனிசாமி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது மாணவர்கள் இளைஞர்கள்தங்களது படைப்பாற்றல் திறனை பயன்படுத்திக் கொள்ளவும் புதிய தொழில் முனைவோராக உருவாகவும்தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் டி என் நிறுவனம் கே எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்துடன் இணைந்து இந்த முகாமை நடத்துகிறது இதில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் புதிய தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி உருவாக்கும் பொருள்கள் அதனை விற்பனைப் படுத்தும்முயற்சி மற்றும் புதிய தொழில் முனைவோர் கான திட்டங்கள் ஆகியவற்றை வழங்க உள்ளனர் இன்று நாட்டில் பல்வேறு துறைகளில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது.இன்னும் சில வருடங்களில் மொபைல் சார்ஜர் இருக்காது அதற்கு பதிலாக ஐந்து ரூபாய் நாணயம் அளவுக்கான ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு சார்ஜ் செய்ய வேண்டியதில்லை என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது இன்னும் சில வருடங்களில் விமான சேவைகள் இருக்காது மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்கிற வகையில் போக்குவரத்து மாறும் சாலைகள் சீராகும் தற்போது உள்ளது போல் மொபைல் போன்கள் இருக்காது கண்ணாடி திரைகளில் அனைத்தையும் காண முடியும் என்கிற நிலை உருவாகும் இதுபோல் 28 மாற்றங்கள் தற்போது உலகளாவிய அளவில் உருவாகி வருகிறது இதனை கருத்தில் கொண்டு பல்வேறு தொழில் முனைவதற்கான சிந்தனைகளை இளைஞர்களிடம் உருவாக்க வேண்டும் என்பதற்காகவும்மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவும் ஒளிமயம் 4.0 என்ற பெயரில் இந்த இரண்டு நாள் முகாம் நடைபெறுகிறது.தொடர்ந்து 36 மணி நேரம் மாணவர்களின் கருத்தாக்கங்கள் குறித்து முகாமில் மாணவர்கள் எடுத்துக் கூற வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இதில் சிறந்த ஸ்டார்ட் அப்ஒன்றுக்கு முப்பதாயிரம் மதிப்பிலான பரிசுத்தொகையும்மாணவர்கள் அளவிலான கண்டுபிடிப்புகளுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் முதல் பரிசாக 20,000 இரண்டாம் பரிசாக 15,000 மூன்றாம் பரிசாக 10,000 வழங்கப்பட உள்ளது என கூறினார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஸ்டார்ட் அப் டி என் திட்ட தலைவர் குரு சங்கர் செல்வம் வரவேற்றார்நிகழ்ச்சியில் கோவை பெங்களூரு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story


