கரூர்- KVB நகரில் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா.

கரூர்- KVB நகரில் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா.
கரூர்- KVB நகரில் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கேவிபி நகரில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் புனரமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இன்று அதிகாலை விநாயகர் பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் , யாகசாலையில் பல்வேறு சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டது. யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் சிவாச்சாரியார்கள் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இதே போல கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாதாரணை நடைபெற்று பக்தர்கள்,பொதுமக்கள் தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் விழா கமிட்டியின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story