தேசிய குடற்புழு நீக்கம் முகாமினை மாவட்ட ஆட்சியர் l துவக்கி வைத்தார்.

தேசிய குடற்புழு நீக்கம் முகாமினை  மாவட்ட ஆட்சியர் l துவக்கி வைத்தார்.
தேசிய குடற்புழு நீக்கம் முகாமினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரைகளை வழங்கி துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் தேசிய குடற்புழு நீக்கம் முகாமினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரைகளை வழங்கி துவக்கி வைத்தார். மேலும் குடற்புழு நீக்கம் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக குழந்தைகளை குடற்புழு தொற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு தேசிய குடற்புழு நீக்கம் முகாம் துவக்க விழா நிகழ்ச்சி அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பங்கு பெற்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரைகளை வழங்கி முகாமினை துவக்கி வைத்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என அனைவரும் குடற்புழு நீக்க விழிப்புணர்வு உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர். இத்திட்டத்தின் கீழ் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் ஆல்பெண்டாசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மாத்திரை வழங்கப்படாது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் 989 பள்ளிகள் மற்றும் 968 அங்கன்வாடிகள் மூலம் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள மூன்று லட்சத்து 22 ஆயிரத்து 37 குழந்தைகள் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 96 ஆயிரத்து 470 பெண்கள் என மொத்தமாக 4,18,507 நபர்கள் இம்முகாம் மூலம் பயனடைவர். இதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் கல்வித்திறன் அதிகரிக்கவும்‌ பெண்கள் ரத்த சோகையில் இருந்து மீள்வதற்கும் உதவும். இம்முகாமில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை , பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய துறைகள் மூலமாக துணை சுகாதார நிலையங்கள், குழந்தைகள் நல மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் சித்திர சேனா , வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் ஹஜித்தா, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஏராளமான பள்ளி மாணவிகள் பங்கு பெற்றனர்.
Next Story