தோல் கழலை நோய் (LUMPY SKIN DISEASE) தடுப்பூசி

தோல் கழலை நோய் (LUMPY SKIN DISEASE) தடுப்பூசி
X
திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு மாதத்திற்கு மேல் வயதுடைய அனைத்து பசுவினங்களுக்கும் வருகின்ற 03.09.2025 முதல் தோல் கழலை நோய் (LUMPY SKIN DISEASE) தடுப்பூசி போடப்படவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தகவல்
தோல் "கழலை” நோய் (LUMPY SKIN DISEASE) தடுப்பூசிப்பணி 2025 தோல் கழலை நோய் / லம்பி தோல் நோய் என்பது எளிதில் பரவக்கூடிய வைரஸ் தொற்று நோய் ஆகும். தோல் கழலை நோய் என்பது பாக்ஸ் விரிடேயின் குடும்பத்தைச் சார்ந்த கேப்ரிபாக்ஸ் வைரஸினால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளில் (பசு மற்றும் எருமை) இருந்து கொசுக்கள், ஈக்கள், பேன்கள் மற்றும் பிற புற ஒட்டுண்ணிகள் மூலம் மற்ற ஆரோக்கியமான கால்நடைகளுக்கு பரவுகிறது. தற்போது, நமது திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு மாதத்திற்கு மேல் வயதுடைய அனைத்து பசுவினங்களுக்கும் வருகின்ற 03.09.2025 முதல் தோல் கழலை நோய் தடுப்பூசி போடப்படவுள்ளது. எனவே, அனைத்து கால்நடை வளர்ப்போர்களும், தங்களது நான்கு மாதத்திற்கு மேல் வயதுடைய பசுவினங்களுக்கு தவறாமல் இத்தடுப்பூசியினை போட்டுக்கொண்டு, தங்கள் கால்நடைகளை இந்நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story